15824 தாமோதரம்: சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புரைகள்.

சி.வை.தாமோதரம்பிள்ளை (மூலம்), ப.சரவணன் (பதிப்பாசிரியர்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட்).

312 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-86820-03-7.

யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து, தன்னந்தனியாகத் தமிழ்ப் புதையலைத் தேடித்திரிந்து தமிழ் மக்களுக்குத் தரும் அரிய, பெரிய முயற்சியில் ஈடுபட்டவர் ஈழத்தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். தமிழகத்தார் போற்றும் உ.வே.சாமிநாதையருக்கும் முன்னரே இவரது பணி வரலாற்றில் பதிவுபெற்று அவரை பதிப்புலகின் தலைமகன் ஆக்கிவிட்டது. மேலும், அக்காலத்தில் ஏட்டுப் பிரதிகளைப் படித்துப் பிழையின்றி எழுதித்தரும் திறமையுள்ளவர் கிடைப்பதே அரிது. இதனால் அவரே ஏடுகளைப் படித்துப் பார்ப்பதுடன், நகல் எடுத்துப் பொருள் ஆராய வேண்டிய பணியிலும் ஈடுபட்டார். செந்தமிழ் நடையில் இலக்கிய நயத்தோடு தான் பதிப்பித்த நூல்களுக்குத் தானே எழுதிய நீண்ட பதிப்புரைகளுக்கும் இலக்கிய வரலாற்றில் தனியானதொரு இடமுண்டு. புதிதாகக் கிடைத்துவந்த சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாற்றை வரைவதற்கான குறிப்புகளை அவர் தன் பதிப்புரைகளில் முன்வைத்தார். சமகாலப் புலமை மரபோடு விவாத நோக்கில் அவர் தொடர்ந்த உரையாடல்கள், தமிழின் நவீனமயமாக்கத்தைப் புரிந்துகொள்ள வழிகோல்வதோடு வாசிப்புச் சுவையும் மிகுந்தவை. சி.வை.தா. அவர்களின் நூல்களின் பதிப்புரைகளைத் தொகுத்துத் தரும் முயற்சி இதுவாகும். ப.சரவணன், சென்னை மாநகராட்சிப் பள்ளியொன்றில் முதுநிலைத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Deluxe für nüsse vortragen

Content Muss man Echtgeld einlösen, um angewandten Sizzling Hot verbunden aufführen hinter vermögen? Wie spielt man unter diesem Automaten? Book of Ra Bingo Sizzling Hot

এভিয়েটর ভিডিও গেম 1xBet: 1xBet এবং উইনিংস 2024-এ কীভাবে অ্যাভিয়েটর খেলবেন সে সম্পর্কে ধারণা

পোস্ট আপনার 1xBet এভিয়েটর গাম্বল কিভাবে উপর ধারনা? ধাপ 5: পেআউট প্রত্যাহার করা আপনি কি 1xBet থেকে রেকর্ড করা সবচেয়ে বড় অ্যাভিয়েটর বিজয় জানেন? আপনার

11128 சிவாலய சேவை: ஏன்? எப்படி?

மு.கந்தையா. சுன்னாகம்: சைவ சமய அபிவிருத்திச் சங்கம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, தை 1986. (சுன்னாகம்: எஸ்.பி.கே. என்ரர்பிரைஸ்). (4), 54 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 21×14 சமீ. சைவாலயம்