ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2007. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம்;, 1108 Bay Street, Toronto, Ontario M5S 2B3).
xxxvi, 230 பக்கம், விலை: கனேடிய டொலர் 20.00, அளவு: 21×14 சமீ.
கல்லாடம் என்பது கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல். ‘கல்லாடம்’ என்பது தமிழ்-இலக்கியத்தில் உள்ள சிறந்த நூல்களுள் ஒன்று. பாயிரமும் நூலும், பதினைந்து முதல் அறுபத்தாறு அடிகள் வரையில் உள்ள நூற்றிரண்டு ஆசிரியப் பாக்களைக் கொண்ட மூவாயிரத்து நானூற்று எட்டு அடிகளில் அடங்கியுள்ளன. இந்நூலில் கல்லாடம் பற்றிய 20 கட்டுரைகளின் வாயிலாக கல்லாடம் என்ற சங்க இலக்கிய நுலை எமக்கு அறிமுகம் செய்கிறார். கல்லாடத்தின் நூற்படைப்புப் பற்றிய பொதுப் பார்வை, கடவுள் வாழ்த்தில் ஒரு பார்வை, கல்லாடத்தின் அகப்பொருள் இலக்கிய இலக்கணம் பற்றிய பார்வை, கல்லாடப் பாடல்களின் அமைப்புப் பார்வை, வழியொழுகி வற்புறுத்தலில் ஒரு பார்வை, சுவடு கண்டறிதல் பற்றிய ஆய்வுப் பார்வை, நற்றாய் வருந்துதலில் ஒரு பார்வை, செலவு நினைந்துரைத்தல் -ஒரு பார்வை, அறத்தொடு நிற்றல், தேர் வரவு கண் மகிழ்ந்து கூறல், பதினோராம் செய்யுள் 20ஆவது செய்யுள் வரை தொகுதியில் ஒரு பார்வை, கல்லாடனாரின் வக்கணம், கல்லாடனாரின் வித்தாரம், கல்லாடனாரின் விண்ணாரம், கல்லாடனாரின் விரகு, அகப்பொருளில் நாடகத் தமிழ் மரபு, கல்லாடம் சைவ ஆகமப் பொருள் நூலா?, கல்லாடத்தில் அகப்பொருட் கனதி, கல்லாடனாரின் சொல்லாக்கத் திறன், கல்லாடத்துள் ஒரு கல்லாடர் ஆற்றுப்படை ஆகிய 20 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4063).