பாஸ்கரன் சுமன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 96 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-723-3.
ஈழமும் சிலப்பதிகாரமும் என்ற பெருவெளிக்குள் பயணிக்கும் இவ்வாய்வு நூலானது சிலப்பதிகாரம், ஈழத்துச் சிலப்பதிகார புத்தாக்கப் பிரதிகள் குறித்த நான்கு கட்டுரைகளையும் ஈழத்தவரின் சிலப்பதிகார ஆராய்ச்சிகளை அடையாளம் காட்டும் ஒரு கட்டுரையையும் உள்ளடக்கியதாக வெளிவருகின்றது. இந்திரவிழா: தொன்மவியல் நோக்கு, வேட்டுவ வரி: இனவரைவியல் நோக்கு, ஈழத்துச் சிலப்பதிகார புத்தாக்கப் பிரதிகளின் சமய அரசியல், சிலப்பதிகாரம்-ஈழத்துச் சிலப்பதிகார புத்தாக்கப் பிரதிகள், இலங்கையில் சிலப்பதிகார ஆய்வு முயற்சிகள் ஆகிய ஐந்து கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. தொகுப்பின் முதலாவது கட்டுரை இந்திரன் தொன்மத்தை மையப்படுத்தி ‘இந்திரவிழாவூரெடுத்த காதை’யை அணுகும் ஆய்வாக அமைகின்றது. இரண்டாவது கட்டுரை ‘வேட்டு வரி’ என்னும் காதையை இனவரைவியல் நோக்கில் அணுக முயல்கிறது. அடுத்துவரும் இரு கட்டுரைகளும் ஈழத்துச் சிலப்பதிகார புத்தாக்கப் பிரதிகள் குறித்தவை. இறுதிக் கட்டுரை ஈழத்தவரின் சிலப்பதிகார ஆராய்ச்சிகளை விபரணப்படுத்துகிறது. அதே வேளை அவ்வாராய்ச்சிகளின் பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடுகிறது. நூலாசிரியர் தேசிய கல்வி நிறுவனத்தின் தமிழ் மொழித்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.