15833 பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்.

நூலாக்கக் குழு. பேராதனை: தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 123 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 978-955-589-248-3.

இந்நூலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர்களால் சிலப்பதிகாரம் குறித்து எழுதப்பட்ட ‘தமிழ்ப் பெருந் தெய்வ உருவாக்கம் கண்ணகியை முன்வைத்து’ (வ.மகேஸ்வரன்), ‘சிலப்பதிகாரம்: சமயப் பெருவெளியில் புதிய முன்மொழிவு’ (ஸ்ரீ பிரசாந்தன்), ‘சிலப்பதிகாரத்தில் துணைநிலைப் பெண்பாத்திரங்கள்’ (ஆன் யாழினி சதீஸ்வரன்), ‘விளிம்பு நிலை நோக்கில் சிலப்பதிகாரம்’ (பெருமாள் சரவணகுமார்), ‘எடுத்துரைப்பியல் நோக்கில் சிலப்பதிகாரம்’ (எம்.எம்.ஜெயசீலன்), ‘தொன்மவியல் நோக்கில் சிலப்பதிகாரம்’ (பாஸ்கரன் சுமன்), ஆகிய ஆறு கட்டுரைகளும், ‘சிலப்பதிகார அடைவு’ (சோ.ஜதீனா த.அருள்விழி) என்ற தலைப்பிலான சிலப்பதிகாரம் குறித்த ஆய்வடங்கலும் இடம்பெற்றுள்ளன. இவை வெவ்வேறு தளங்களில் சிலப்பதிகாரத்தை ஆராய்கின்றன. நவீன கோட்பாட்டுப் பார்வையில் இக்காவியத்தைப் புதிய நோக்கு நிலையில் இவை அணுகுகின்றன. நூலாக்கக் குழுவில் சோதிமலர் ரவீந்திரன், வ.மகேஸ்வரன், ஸ்ரீ பிரசாந்தன், ஆன் யாழினி சதீஸ்வரன், பெ.சரவணகுமார், எம்.எம்.ஜெயசிலன், சோ.ஜதீனா, த.அருள்விழி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

13423 வருகையின் தூதன் சிறப்புமலர்-1988.

செ.யோ.செல்வராசா (மலராசிரியர்). மட்டக்களப்பு: கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமம், கிரான், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (அச்சக விபரம் தரப்படவில்லை). (22) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. கிரான் கிறிஸ்தவ சேவா