15838 காற்று மரங்களை அசைக்கின்றது.

தேவகாந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 264 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-59-7.

காற்று மரங்களை அசைக்கின்றதென்ற இப்பத்தி எழுத்துத் தொகுப்பின் தலைப்பு, காற்றின் விசைக்கேற்ப மரங்களசையுமென்னும் இயல்பான பொருளோடு, நூல்களின் கனதிக்கேற்ப வாசக இதயங்கள் அதிர்வு கொள்கின்றன என்ற அர்த்த வியாப்தியையும் தன்னுள்ளாய்க் கொண்டிருக்கிறது. இதில் 53 நூல்கள் பற்றிய தனது திறனாய்வுப் பதிவுகளை தேவகாந்தன் வழங்கியுள்ளார். சுணைக்கிது/நிரூபா, மீண்டும் வரும் நாட்கள்/மு.புஷ்பராஜன், ம்…/ஷோபாசக்தி, நாடற்றவனின் குறிப்புகள்/இளங்கோ, பொறியில் அகப்பட்ட தேசம்/மு.பொன்னம்பலம், வட்டம்பூ/ பாலமனோகரன், நிறமற்றுப்போன கனவுகள்/இளவாலை விஜயேந்திரன், ஒரு மரணமும் சில மனிதர்களும்/தாட்சாயணி, மூன்றாம் சிலுவை/ உமா வரதராஜன், காவல்கோட்டம்/சு.வெங்கடேசன், ஆறாவடு/ சயந்தன், முகங்களும் மூடிகளும்/கோகிலா மகேந்திரன், சினிமா: சட்டமும் சாளரமும்/சொர்ணவேல், குமார் மூர்த்தி கதைகள், கடவுளின் மரணம்/ கருணை ரவி, 13905/ம.தி.சாந்தன், ஒலிக்காத இளவேனில்/தான்யா-பிரதீபா, கானல்வரி/தமிழ்நதி, மரகதத் தீவு/காஞ்சனா தாமோதரன், சிலுவையில் தொங்கும் சாத்தான்/அமரந்தா-சிங்கராயர், கொலம்பசின் வரைபடம்/யோ.கர்ணன், ஏகலைவன், தீனிப்போர்/இளைய பத்மநாதன், மகாகவியின் மூன்று நாடகங்கள்/எம்.ஏ.நுஃமான், நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை/நாஞ்சில் நாடன், கடல் கடந்தும்/வெங்கட் சாமிநாதன், ஊழிக்காலம்/ தமிழ்க்கவி, மக்கத்து சால்வை/S.L.M.ஹனிபா, விமர்சனத் தமிழ்/தி.க.சிவசங்கரன், ஈழத்துக் கவிதைக் கனிகள்/சிலோன் விஜயேந்திரன், இந்த வனத்துக்குள்/நீ.பீ.அருளானந்தன், முதுசொமாக, தொலையும் பொக்கிஷங்கள்/ இ.இராஜேஸ்கண்ணன், தென்னாசியக் கவிதைகள்/ சோ.பத்மநாதன், தாழப் பறக்காத பரத்தையர் கொடி/பிரபஞ்சன், விடம்பனம்/நட.சீனிவாசன், நட்ராஜ் மகராஜ்/தேவிபாரதி, பாரபாஸ்,பேர்லாகர் க்விஸ்ட்/ க.நா.சு., ஊரடங்கு இரவு, பஷரத் பீர்/ க.பூரணச்சந்திரன், பண்பாட்டுப் பொற்கனிகள்/சச்சிதானந்தன் சுகிர்தராஜா, பெருவலி/ சுகுமாரன், புனைவின் நிழல்/ந.மயூரரூபன், ஆறு சிறுகதைகள் ஓரு பகுப்பாய்வு/A.H.M.நவாஷ், அம்மை/பா.அகிலன், ஒரு காலத்தின் உயிர்ப்பு/பா.அ.ஜயகரன், பனித்தீ/அ.மங்கை, ஸ்லம் டோக் மில்லியனர் (சினிமா), ஒருபொம்மையின் வீடு/பி.விக்கினேஸ்வரன், தமிழ் வென்றெழும் தொன்மொழி/வசந்தா டானியல், குறுந்திரைப்பட விழா ரொரன்டோ-2006, கனடா தமிழ் நாடக அரங்கு-2007, கனடா தமிழ் சினிமா ஆகிய 53 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 180ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Best 10 Deposit Casino Bonus Uk

Content Reviewing User Experiences And Ratings: Slotsville casino iphone Casino Minimum Deposit 1 For Real Money Free 25 Pound No Deposit Bonus Giveaway Zodiac Casino