தம்பிப்பிள்ளை மேகராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 147 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-670-0.
இந்நூல் அறிமுகம், பார்த்திபனின் புனைகதைகள்: யதார்த்தவாத நோக்கு, புகலிடத் தமிழ் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தில் பொ.கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் நினைவுகள்’, ஜீவகுமாரனின் புனைகதைகள்: பண்பாட்டு நோக்கு, நிரூபாவின் சிறுகதைகள்: பெண்நிலைவாத நோக்கு, அவுஸ்திரேலியப் புகலிடத் தமிழ் நாவல் வரலாற்றில் தாமரைச்செல்வியின் ‘உயிர்வாசம்’ ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளர்களது படைப்புக்களினூடாக வெளிப்படும் அடிப்படையான சிறப்புகளை உற்றுணர்ந்து அவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு நோக்குகளிலும் போக்குகளிலும் படைப்புகளை அணுகியிருப்பது சிறப்பாகும். நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இளங்கலைமாணி, முது தத்துவமாணி பட்டங்களைப் பெற்றிருப்பதுடன் அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.