15840 பன்முக நோக்கில் ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியங்கள்.

தம்பிப்பிள்ளை மேகராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 147 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-670-0.

இந்நூல் அறிமுகம், பார்த்திபனின் புனைகதைகள்: யதார்த்தவாத நோக்கு, புகலிடத் தமிழ் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தில் பொ.கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் நினைவுகள்’, ஜீவகுமாரனின் புனைகதைகள்: பண்பாட்டு நோக்கு, நிரூபாவின் சிறுகதைகள்: பெண்நிலைவாத நோக்கு, அவுஸ்திரேலியப் புகலிடத் தமிழ் நாவல் வரலாற்றில் தாமரைச்செல்வியின் ‘உயிர்வாசம்’ ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளர்களது படைப்புக்களினூடாக வெளிப்படும் அடிப்படையான சிறப்புகளை உற்றுணர்ந்து அவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு நோக்குகளிலும் போக்குகளிலும் படைப்புகளை அணுகியிருப்பது சிறப்பாகும். நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இளங்கலைமாணி, முது தத்துவமாணி பட்டங்களைப் பெற்றிருப்பதுடன் அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்

15531 கொரோனாக் கவிதைகள்.

க.பரணீதரன், இ.சு.முரளிதரன், பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). (4), 36 பக்கம், விலை:

9301 இலங்கை அரசியல் யாப்புக்களின் பரிணாம வளர்ச்சி.

ரஜித்த பண்டித்தசேகர, நிரோஷ் பண்டார (தொகுப்பாசிரியர்கள்), எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 3: சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பிரிவு, அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 310, காலி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008.