சு.தவச்செல்வன். டிக்கோயா: சு.தவச்செல்வன், மழை வெளியீடு, இன்வெரி தோட்டம், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44552-8-3.
மலையக எழுத்தாளரும் புனைகதை ஆசிரியருமான மு.சிவலிங்கத்தின் சிறுகதைகள் பற்றிய ஆய்வாக வெளிவரும் இந்நூல் அவரது கதைகள் ஊடாக 1950களுக்குப் பிந்திய மலையக சமூகம் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகின்றது. மு.சிவலிங்கத்தின் சிறுகதை தொகுப்புகளான ‘மலைகளின் மக்கள்’, ‘ஒரு விதை நெல்’, ‘ஒப்பாரிக்கோச்சி’ ஆகிய தொகுப்புகளில் வெளிவந்த 44 கதைகளை அடிப்பையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதே இவ்வாய்வு. அறிமுகம், நுழைவாயில், மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளில் வெளிப்படும் மலையக சமூக பிரச்சினைகள், மலையக மக்களும் குடியுரிமை பிரச்சினையும், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் மலையக தொழிலாளர்களும், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் இந்திய முதலாளிகளும், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையும் உயிர்ப்பலிகளும், தொழிலாளர்களின் வாழ்வியல் அவலங்கள், தோட்ட நிர்வாகிகளின் தொழிலாளர்கள் மீதான அழுத்தங்கள், கொழும்பிற்கு வேலைக்குச் சென்றோர் தொடர்பான பிரச்சினைகள், சிங்கள குடியேற்றவாதமும் இனத்துவ அரசியலும், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் தாக்கங்கள், அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் கதைகள், மலையக அரசியலை விமர்சிப்பவை, உதிரிகள் பற்றிய கதைகள், பின்னுரை ஆகிய இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக ‘புனைகதையின் அரசியல் தளம் – வெந்து தணிந்தது காலம்: ஒரு மதிப்புரை’ என்ற ஆக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.