எம்.அப்துல் றஸாக். அக்கரைப்பற்று -02: பெருவெளி பதிப்பகம், 78/1, உடையார் வீதி, பதூர் நகர், 1வது பதிப்பு, டிசம்பர்; 2017. (அக்கரைப்பற்று-02: சிற்றி பொயின்ற், 78/1, உடையார் வீதி).
(16), 17-80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-42878-0-8.
தன் மண்ணின் வாசனையை நுகர்ந்ததன் மூலம் மண்ணின் நிறத்தையும் காண்கிறார் இவ்விலக்கிய கர்த்தா. உம்மாவின் ஆசை, பாத்தும்மாவின் பாம்பு, கூட்டிக்கொண்டு ஓடுகிறார்கள், குறைவற்ற செல்வம், தொலையும் பெற்றோர்கள், பிச்சை புகினும், செல்வாக்கிழந்து வரும் கிழக்கிலங்கைக் கிராமியம், கடற் புனைவுகள், ஆஷிக்கும் அவன் கூட்டாளிகளும், சிறுவர் உரிமைகளும் சிக்குண்டு தவிக்கும் ஆசிரியர்களும் ஆகிய பத்து இலக்கிய ஆக்கங்களினூடும், சிறுகதையுமற்ற சுய வரலாறுமற்ற சமூகவியல் ஆய்வாகவும் மனதுக்கு நெருங்கிய தன் வாழிட மண்ணின் கட்டுரைகளை இத்தொகுப்பின் வழியாக உள்ளடக்கியிருக்கின்றார் அப்துல் றசாக்.