15845 விமர்சன நோக்கில் சில பதிவுகள்.

க.பரணீதரன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-55-9.

ஈழத்தில் ஹைக்கூ கவிதை, மண்டூரிலிருந்து வெளிவந்த ‘பாரதி’, ‘கலையுருக்காட்டி’ காட்டும் கோலங்கள், யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் ‘இன்னும் பேச வேண்டும்’, நவஜோதி யோகரட்ணத்தின் ‘மகரந்தச் சிதறல்கள்’, தெணியானின் ‘இன்னும் சொல்லாதவை’ (வாழ்வனுபவங்கள்) சொல்பவை, தாட்சாயணியின் ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’, கே.எஸ்.சிவகுமாரனின் ‘திறனாய்வு’ மீதான எண்ணப் பதிவுகள், சு.க.சிந்துதாசனின் ‘காணாமற்போன காற்று’, இரா.தர்மராஜாவின் ‘மனக்கோடுகள்’, எஸ்.முத்துமீரானின் ‘என்னடா கொலமும் கோத்திரமும்’, மிஷாந்தி செல்வராஜாவின் ‘காகிதங்கள் பேசுதடி’, வல்வை மு.ஆ.சுமனின் ‘முகாரி பாடும் முகங்கள்’, நிலா தமிழின்தாசனின் ‘பள்ளிச் சட்டையும் புத்தகப் பையும்’ ஆகிய 14 திறனாய்வுக் கட்டுரைகள் இந்நூலில் ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. முதற் கட்டுரை உதயன்-பொங்கல் சிறப்பிதழிலும், எஞ்சியவை ஜீவநதி இதழ்களிலும் வெளியானவை. பரணீதரன், ‘ஜீவநதி’ சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். இந்நூல் 170ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14063 கடவுள் ; வழிபாடும் தமிழ் மக்களும்.

ஆ.விஸ்வலிங்கம். கொழும்பு: டாக்டர் ஆ.விஸ்வலிங்கம், 26, உவார்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 1975. (சென்னை-01: Hoe and Co.,The Premier Press).. 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. அறமே