சிவரமணி. திருக்கோணமலை: சிவரமணி இராசரத்தினம், 1வது பதிப்பு, மே 2016. (திருக்கோணமலை: ஸ்ரீராம் அச்சகம், இல. 159 A, கடல்முக வீதி).
xv, 85 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-3991-00-3.
திருமலை கவிச்சுடர் சிவரமணியின் இந்நூல் வலிசுமந்த மண்ணிலிருந்து தடம் பதித்த சுவடுகளாக 21 தலைப்புகளில் இவரது கதைகளும் கதைகளுடன் ஒத்துப் போகின்ற கவிதைகளுமாக இடம்பெற்றுள்ளன. கடுகுக்கதை பாணியில் ஒரு கதையின் சிறு பாகத்தையும் சொல்லி அதே வீச்சுடன் பொருத்தமான கவிதையையும் புனைந்திருக்கிறார். இணைப் படைப்புக்களாகவே அனைத்து ஆக்கங்களும் காணப்படுகின்றன. கதைகளினதும் கவிதைகளினதும் கருப்பொருள் ஈழத்தமிழரின் மௌனிக்கப்பட்ட போராட்டத்தைச் சுற்றியே அமைந்துள்ளன. சிவரமணி இராசரத்தினம் (1972.11.06) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்தவர். தனது கல்வியை யாழ் மீசாலை வீரசிங்கம் மாகவித்தியாலயம், கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கற்றார். பிறந்த இடம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் எழுத்தாளர் சிவரமணி தற்பொழுது திருக்கோணலையை தனது வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே இலக்கிய ஆர்வம் உள்ளவராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பல மேடை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரின் ஆக்கங்கள் பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.