சின்னையா மகேஸ்வரன். ஜேர்மனி: சின்னையா மகேஸ்வரன், Korn Str 322, 28201 Bremen , 1வது பதிப்பு, தை 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
304 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
20.01.2019 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் சால்புறுக்கனில் St.Ingbert நகரில் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களது எழுத்தாக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை அவரது 70ஆவது பிறந்தநாள் பரிசாக அவர்களது பிள்ளைகள் வெளியிட்டிருந்தனர். இத்தொகுப்பில் இந்துமகேஷ் எழுதிய நெடுங்கதைகளான மௌனத்தில் அழுகின்ற மனங்கள், பழைய மனிதன் புதிய உலகம், கனவுகளில் கலைந்தவர்கள், நெஞ்சுக்குள்ளே ஒரு(த்)தீ, நிழலைத் துரத்தியவன், விடைபெறும் நேரங்கள் ஆகிய ஆறு படைப்பாக்கங்களும், எல்லாம் பொய்யெனில் பொய்யும் பொய்யே, அம்மாவும் நீயே, ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய், உருவாய் அருவாய் உளதாய் இலதாய், உன் சொந்தம் என் சொந்தம், இல்லாதவர்கள், கேள்விக்கென்ன பதில், மீளா அடிமை உனக்கே ஆளாய், பாசமாம் பற்றறுத்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி, வீடுவரை உறவு, எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், தனிமையிலே இனிமை, சிவமும் சீவியமும், அன்பு என்பது தெய்வமானது ஆகிய 15 கட்டுரைகளும், புரிதல், விடியல், வாழ்தல், அகதி, நிழலில், ஊடல், காதலி, ஒரே ஒரு கதை, இல்லாள், இருள் ஆகிய 10 சிறுகதைகளும், அவர்களும் இவர்களும், மாறாத மனங்கள் ஆகிய இரு நாடகங்களும், இறை வணக்கம், என்னுயிராய், கரை, வெளி, தரிசனம், அந்திநேரச் சிந்தனை, ஓடு, முதுமை, கனவு, அம்மா எனும்.., சுமை ஆகிய 11 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.