15849 என்.கே.ரகுநாதம்.

கற்சுறா (தொகுப்பாசிரியர்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2021. (சென்னை 600005: ஸ்ரீதுர்கா பிரிண்டர்ஸ்).

896 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 1300.00, அளவு: 24.5×16 சமீ.

என்.கே.ரகுநாதன் (1929-2018) பருத்தித்துறையில் வராத்துப்பளை கிராமத்தில் பிறந்தவர். பின்னாளில் கனடாவில் குடிபுகுந்து வாழ்ந்துவந்தவர். ஈழத்தில் சாதியம் சார்ந்த பேரியக்கச் செயற்பாடுகளில் தீர்க்கமாய் இயங்கியவர்களில் முக்கியமானவர் என்.கே. ஆர். பின்னர் கனேடிய வாழ்விலும் பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் இயங்கியவர். ‘வெண்ணிலா’, ‘எழிலன்’, ‘துன்பச்சுழல்’, ‘வரையண்ணல்’ ஆகிய புனைபெயர்களிலும் இவர் எழுதிவந்துள்ளார். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் ‘நிலவிலே பேசுவோம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பின் சாதி எதிர்ப்பு இலக்கியத்தின் போக்கில் மிகத் தீவிரமாக இயக்கம் கொண்ட இவரின் சிறுகதைகள், நாவல், நாடகப் பிரதிகள், நேர்காணல்கள் கடிதங்கள் உரைநடைகள் என அனைத்தையும் உள்ளடக்கிய பெரும் தொகுப்பு இதுவாகும். என்.கே.ரகுநாதன் சிறுகதைகள், என்.கே.ரகுநாதன்: வரலாற்றுச் சித்திரம் ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’, என்.கே.ரகுநாதன்: நாடகம் ‘கந்தன் கருணை’, என்.கே.ரகுநாதன்: கட்டுரைகள், என்.கே.ரகுநாதன்: நேர்காணல்கள், என்.கே.ரகுநாதன்: தோழமை நினைவுகள், என்.கே.ரகுநாதன்: கவிதைகள், குறிப்புகள், எதிர்வினைகள், என்.கே.ரகுநாதன்: கடிதங்கள், என்.கே.ரகுநாதன்: மற்றவர்கள் பார்வையில், என்.கே.ரகுநாதன்: அஞ்சலிகள், என்.கே.ரகுநாதன்: புகைப்படங்கள் ஆகிய 11 பிரிவுகளின் கீழ்  ஆக்கங்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்