இ.சு.முரளிதரன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
vii, 138 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5சமீ., ISBN: 978-955-0958-41-2.
இந்நூலில் சு.வில்வரத்தினம், ரியாஸ் குரானா, ராஜ் சிவா, ஆதவன் தீட்சண்யா, அஜயன் பாலா, தானா விஷ்ணு, தீபச்செல்வன், மகுடேசுவரன், ச.முகுந்தன், அகிலா, லெனின் பாரதி, தி.செல்வமனோகரன், அ.ராமசாமி, ரவிபேலேட், சித்தாந்தன் ஆகிய பதினைந்து இலக்கியப் பிரமுகர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள சு.வில்வரத்தினத்தின் நேரகாணல் ‘ஏகலைவன்’ இதழில் இடம்பெற்றிருந்தது. எஞ்சியவை ஜீவநதி இதழ்களில் வெளியானவை. பன்னூலாசிரியரான இ.சு.முரளிதரன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.