அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அ.யேசுராசா, குருநகர், 1வது பதிப்பு, நவம்பர் 2010. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், குருநகர்).
36 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.
அமரர் அத்தனாஸ் செபஸ்தியானா (நல்லம்மா) வின் மறைவின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது மகனான கவிஞர் அ.யேசுராசா அவர்களால் 24.11.2010 அன்று தொகுத்து வெளியிடப்பட்ட நினைவு மலர் இது. இதில் கீதாஞ்சலி (மகாகவி தாகூர்), நல்லம்மாவின் நெருப்புச்சட்டி-கவிதை (அ.யேசுராசா), அறியப்படாதவர்கள் நினைவாக-கவிதை (அ.யேசுராசா), மூன்று கவிதைகள்- காத்திருப்பு, உயிர் வாழுதல், இன்று (அ.யேசுராசா), நிலை மயக்கம் – கவிதை (ஜோசப் ஃப்ரொட்ஸ்கி-ரஷ்யா), ஒரு ஞாயிற்றுக்கிழமை-கவிதை (சண்முகம் சிவலிங்கம்), வாடைக் காற்றே- கவிதை (மு.புஷ்பராஜன்), அஞ்சலி-கவிதை (நவாலியூர் நடேசன்), சிலுவை-கதை (நாக. பத்மநாதன்), முருகைக் கற்கள்-கதை (த.ஆனந்தமயில்), திரைப்படம்-நேர்காணல் (அ.யேசுராசா), மாரடைப்பு, மார்புவலி நோய்களை அறிவது எப்படி? (எம்.கே.முருகானந்தன்), புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியுங்கள் (எம்.கே.முருகானந்தன்), நீரிழிவு நோய் பற்றி சகலரும் அறியவேண்டியவை (எம்.கே.முருகானந்தன்), நீங்கள் புகைபிடிப்பவரா? (நவீன் குமார்), மாணவருக்கு-வேகமாக வாசித்தல் (அ.அல்போன்ஸ்), உதைபந்தாட்டம்- ஆட்டக்காரருக்கு அறிவுரை, பார்வையாளருக்கு அறிவுரை (சி.மே.மாட்டீன்) ஆகிய ஆக்கங்கள் தேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளன.