கு.சிவகடாட்சம்பிள்ளை, மாவை வரோதயன் (இயற்பெயர்: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமரன்). தெல்லிப்பழை: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன் நினைவு மலர் வெளியீட்டுக் குழு, வலிகாமம் வடக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (யாழ்ப்பாணம்: அகரம் கணனிப் பதிப்பகம், பிரவுண் வீதி, தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக, கொக்குவில்).
(4), 152 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.
மாவை வரோதயன் (12.09.1965-29.08.2009) மாவிட்டபுரத்தைப்;; பிறப்பிடமாகக் கொண்டவர். காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரி, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில்; பயின்று, கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலே பணிபுரிந்தவர். பின்னர் சுகாதாரப் பரிசோதகராக (P.H.I) வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் பணியாற்றினார். பின்னாளில் சில காலம் அவர் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 29.08.2009 இல் யாழ்ப்பாணத்தில் மறைந்தார். இந்நினைவுமலர் 27.09.2009 அன்று அவரது மறைவின் 31ஆம் நாள் நினைவின்போது வெளியிடப்பட்டது. இதில் மாவை வரோதயனின் தந்தையார் எழுதிய ‘யாழ்ப்பாண சரித்திரத்தில் நாம்-ஓர் கண்ணோட்டம்’ என்ற கட்டுரையும், மாவை வரோதயனின் கட்டுரைகளான பளை வைரவர் கோயில், மனிதம், நாமும் நமது பண்பாடும், பகுத்தறிவின் பயன், இதிகாசங்களில் இதயத் தேடல், விளையாட்டின் வித்தை, மனிதத்திடை கலை, இயற்கை மனிதம் ஆகியவையும், அவர் எழுதிய கவிதைகளான தேருவர் காணீர், மூடர் குழைத்த உடல், வள்ளுவன் மறந்த வரிகள், சூரிய வணக்கம், செய்தியின் செம்மை, தோழியின் ஆதங்கம், மனிதம், கவிஞன் பொய்யனா?, நீதியோ சொல்லு அம்மா, பரந்தாமன் சந்நிதிக்கு, மனிதப் பண்பு ஆகியவையும், உதயன் பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலொன்றும் தொகுத்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.