செல்வம் அருளானந்தம். சென்னை 2: தமிழினி, 25-A, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாசா, 769, அண்ணா சாலை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (சென்னை 14: ஆர்.கே. பிரிண்ட்ஸ்).
239 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 81-87641-53-3.
எழுதித் தீராப் பக்கங்கள்: அனுபவப் பதிவுகள்.
செல்வம் அருளானந்தம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது திருத்திய பதிப்பு, ஓகஸ்ட் 2021, 1வது பதிப்பு, மார்ச் 2016. (சென்னை 17: மணி ஓப்செட்).
223 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 275., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-90802-69-2.
ஈழத்தவரின் புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர்வோடும் பகடியாகவும் சித்திரிக்கும் நூல். பாரிஸ் தமிழ்ச் சமூகத்தின் வழியே ஒப்புநோக்கிப் பார்க்கப்படும் 80களின் புலம்பெயர் தமிழர்களினது வாழ்வியல் சரிதம் இதுவெனலாம். 26 அத்தியாயங்கள் கொண்டது. நூலாசிரியர் அவற்றை எழுதிய விதம், தெரிந்தெடுத்த சொற்கள், காட்சிப்படுத்திய படிமங்கள், அவற்றினூடே தாராளமாக அள்ளித் தெளித்த நகைச்சுவை அனைத்தும் வாசகரை பாரிஸ்ஸூக்கு கூட்டிச் சென்றுவிடுகின்றன. கொண்டலிலை மழை கறுக்கத் தேன்றிய தேவதைகள், வியேந்தம்மான், தட்சூணுடன் சித்தைக்குப் போனமை, மெத்ரோ பயணங்களில், கோபுர வாசலில் நுரை மது, அவுட்ட பாரிசிலை அவியவிடாத கோழி, மொப் வாளியுடன் வெரிகுட் பேரழகி, மட்டு நீக்கி மது மகிழ்ந்தும், பாரிஸ் நகரத்துக் காட்சிப் படலம், பாரிஸின் பொருள்விழையும் ஆய்தொடியார், ஆசைத்துரை: நூறில் ஒருவன், வில்விறட்டனும் விமலதாசும், ஐசேயின் பிரெஞ்சுக் காதல், பாதர் ஓடியோவுடன் பொங்கலும் கம்யூனிசமும், மாஸ்டரும் நரகலோக நங்கையும், நெடுவல் குகப்படலம், றிச் கேக்கும் அரிச்சந்திர மயானகாண்டமும், எங்கிருந்தோ வந்தாள் இளவரசி தானென்றாள், முடியப்பன் மூட்டிய நெருப்பு, பிரெஞ்சுக் காதலும் நேர்மையான அப்பரும், பொன்மகள் வந்தாள், அழுகை, ஒஸ்லோ இரயில் பயணத்தில், பெண் ஒருத்தி என் எதிரே வந்தாள், கசெற்றால் குழம்பிய கலியாணம், செயின் ஆற்றங்கரை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.