15859 உலக மகா யுத்தங்கள் (சுருக்கம்).

நா.மயில்வாகனம். கொழும்பு: நா.மயில்வாகனம், குரு கல்விச் சேவை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iii, 152 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படம், விலை: ரூபா 280., அளவு: 23×16  சமீ., ISBN: 978-955-70521-6-8.

உலக மகா யுத்தங்கள் பற்றி மாணவர்கள் குறுகிய நேரத்தில் கற்பதற்குச் சுருக்கமாக இந்நூல் வெளிவருகின்றது. வரலாறு (க.பொ.த. சாதாரண தர) பாடத்திட்டத்தில் ‘உலக மகாயுத்தங்கள்’ இடம்பெற்றுள்ளது. தகவல் தேடலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்நூல் உதவியாக அமையும். உலக மகாயுத்தங்கள் பற்றி ஏற்கெனவே விரிவான நூல்கள் வெளிவந்துள்ளனவெனினும் மாணவர்கள் பரீட்சை நோக்கில் ஆயத்தம் செய்ய இந்நூல் வழிகாட்டியாக அமையும். இரண்டு பகுதிகளைக்கொண்ட இந்நூலில் முதலாம் உலக மகா யுத்தம் பற்றிய முதற் பகுதியில் 1914இல் ஐரோப்பா: அறிமுகம், முதலாம் உலக மகாயுத்தம்: காரணங்கள்,  வல்லரசுகள் பங்கேற்பு, யுத்த உபகரணங்கள், யுத்த முனைகள், முதலாம் உலக மகாயுத்தம்: விளைவுகள், பாரிஸ் உடன்படிக்கை-1919, சர்வதேச சங்கம், கால அட்டவணை ஆகிய ஒன்பது தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தம் பற்றிய இரண்டாவது பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம்: காரணங்கள், ஹிட்லரின் எழுச்சி, முசோலினியின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஜப்பானின் எழுச்சியும் ஆக்கிரமிப்புகளும், யுத்த முனைகள், இரண்டாம் உலக யுத்தம்: விளைவுகள், ஐக்கிய நாடுகள் சபை, கால அட்டவணை ஆகிய எட்டு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Jogos Online Dado afinar Jogos 360

Content Variedade puerilidade jogos puerilidade bingo online E aprestar Jogos puerilidade Casino grátis? Menstruação gerais para desviar Zeus Bingo da avantajado lógica e abiscoitar prêmios:

15821 வள்ளுவன் சொல்லே வாழும் நெறி.

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 165 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,