ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
142 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8715-75-8.
ஆசிரியர் இந்நூலில் நாகரிகங்களின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் காலம் என்பன பற்றி விரிவாகக் கூறுகின்றார். திராவிட இன மக்கள், திராவிட நாகரிகம் பற்றியும் விரிவான தகவல்களை சுவைபடத் தந்துள்ளார். இந்நூல் பிரியா பிரசுரத் தொடரில் 68ஆவது நூலாக வெளிவந்துள்ளது. புகைப்பட ஆதாரங்களுடனும், விளக்கப்படக் குறிப்புகளுடனும் விபரிக்கப்படும் இவ்வாய்வு, மனித குல வரலாறு, உயிர்த் தோற்றம், மனித இனத் தோற்றம், மனிதம் மலர்ந்தது, நதிக்கரை நாகரிகம், திராவிட இனம், மக்கள் தொகை, முதல் அகழ்வு, இரண்டாவது அகழ்வு, முதுமக்கள் தாழிகள், தாழியின் சிறப்பு, தாழி வகைகள், ஒருமைப்பாடு, வெளிநாட்டுத் தாழிகள், தாழிப் புதையலில் திராவிடர் நாகரிகம், தமிழகம்-நாவலம்-தென்மதுரை, சுமேரியரும் உபெய்துகளும், மொசபடோமியா-பஹ்ரைன்-இந்தியா, மொழிகள், பூம்புகார் அகழ்வாய்வு, முதல் நாகரிகம் பஃறுளி ஆற்றங்கரையில் தோன்றியதே ஆகிய தலைப்புகளின் வழியாக விரிகின்றது.