15862 தொன்மைமிகு திராவிட நாகரிகம்.

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

142 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8715-75-8.

ஆசிரியர் இந்நூலில் நாகரிகங்களின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் காலம் என்பன பற்றி விரிவாகக் கூறுகின்றார். திராவிட இன மக்கள், திராவிட நாகரிகம் பற்றியும் விரிவான தகவல்களை சுவைபடத் தந்துள்ளார். இந்நூல் பிரியா பிரசுரத் தொடரில் 68ஆவது நூலாக வெளிவந்துள்ளது. புகைப்பட ஆதாரங்களுடனும், விளக்கப்படக் குறிப்புகளுடனும் விபரிக்கப்படும் இவ்வாய்வு, மனித குல வரலாறு, உயிர்த் தோற்றம், மனித இனத் தோற்றம், மனிதம் மலர்ந்தது, நதிக்கரை நாகரிகம், திராவிட இனம், மக்கள் தொகை, முதல் அகழ்வு, இரண்டாவது அகழ்வு, முதுமக்கள் தாழிகள், தாழியின் சிறப்பு, தாழி வகைகள், ஒருமைப்பாடு, வெளிநாட்டுத் தாழிகள், தாழிப் புதையலில் திராவிடர் நாகரிகம், தமிழகம்-நாவலம்-தென்மதுரை, சுமேரியரும் உபெய்துகளும், மொசபடோமியா-பஹ்ரைன்-இந்தியா, மொழிகள், பூம்புகார் அகழ்வாய்வு, முதல் நாகரிகம் பஃறுளி ஆற்றங்கரையில் தோன்றியதே ஆகிய தலைப்புகளின் வழியாக விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

12186 – ஹரிஹர சுதன் தெய்வீகப் பாமாலை.

ஸ்ரீ ஐயப்பன் புனித யாத்திரைக் குழுவினர். கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், 17A, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்கழி 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ,

17522 எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?.

இளவாலை விஜயேந்திரன் (இயற்பெயர்: தியாகராஜா விஜயேந்திரன்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, இணை வெளியீடு, ஐக்கிய இராச்சியம்: கூடல் பதிப்பகம், ப்ளாக்ஃபென் வீதி, சிட்கப், கென்ட், 1வது பதிப்பு, மே 2023.

9287 உலகைச் சூறையாடும் உலகமயம்.

பி.இரயாகரன். சென்னை 600002: கீழைக்காற்று வெளியீட்டகம், 10 அவுலியா தெரு, எல்லீசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (சென்னை 24: எழில் பிரிண்ட்ஸ், 63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்). 176 பக்கம், விலை: இந்திய

16422 செயா உலக நீதிக் கதைகள் : முதலாம் பாகம்.

வ.செல்லையா. யாழ்ப்பாணம்: கீரிமலை யோகர் சுவாமிகள் மகளிர் தவநிலைய வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 12: ஸ்ரீசக்தி பிரிண்டிங் இன்டஸ்றீஸ்). 40 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 19×12.5 சமீ.