15865 ஆரம்ப புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது.

க.குணராசா. யாழ்ப்பாணம்: க.குணராசா, 40, கல்லூரி வீதி, நீராவியடி, 5ஆவது பதிப்பு, பெப்ரவரி 1973, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).

173 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 4.00, அளவு: 21×14 சமீ.

‘ஆரம்ப புவியியல்’ என்ற இந்நூல், எட்டாம் வகுப்பிற்குரிய அரசினர் பாடத்திட்டத்திற்கும், வடமாகாண ஆசிரியர் சங்கப் பாடத்திட்டத்திற்கும் ஏற்ப ஆக்கப்பட்டுள்ளது. புவியியல் கற்கும் மாணவர்கள் தங்களது ஆரம்பப் புவியியல் அறிவைச் சரிவரப் பெற்றுக் கொள்வதற்கு இந்நூல் உதவும். இந்நூலில் ஏராளமான விளக்கப் படங்களும் பயிற்சிகளுமுள்ளன. பல படங்கள் வர்ணப் படங்களாக இத் திருத்திய பதிப்பிலுள்ளன. நமது பூமி, அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும், இலங்கைப் புவியியல், நெற்செய்கை, வியாபாரத் தானியப் பயிர்கள், இலங்கையின் வர்த்தகப் பயிர்கள், இலங்கையின் ஏனைய விளைபொருட்கள், பருத்திச் செய்கை ஆகியன முதலாம் பருவப் பாடங்களாகவும், காலநிலை மூலகங்கள், காலநிலைப் பிரதேசங்கள், இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள், விலங்கு வேளாண்மை, பாற்பண்ணைத் தொழில், மீன்பிடித் தொழில், காடுகளும் காட்டுத் தொழில்களும் ஆகிய பாடங்கள் இரண்டாம் பருவப் பாடங்களாகவும், இலங்கையின் கைத்தொழில்கள், இரும்பு உருக்குக் கைத்தொழில்கள், இலங்கையின் நீர்மின்சக்தி, உலகின் குடிப்பரம்பல், உலகின் பிரதான வியாபாரப் பாதைகள், இலங்கையின் குடியிருப்புகள் ஆகிய பாடங்கள் மூன்றாம் பருவப் பாடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இறுதியில் வினாத்தாள் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14564).

ஏனைய பதிவுகள்