15868 ஏழாந்தரப் புவியியற் படப் பயிற்சி (தேசப்படத் தொகுதி இணைந்துள்ளது).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).

(34) பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 1.35, அளவு: 28×22 சமீ.

கல்வித் திணைக்களம் வெளியிட்டிருந்த ஏழாந்தரப் புவியியல் வழிகாட்டிக்கு இணங்கப் பருவம் பருவமாக வகுக்கப்பட்ட படவேலைப் பயிற்சி இதுவாகும். இலகுவாகவும் தெளிவாகவும் மாணவர்களுக்கு புவியியற் கல்வியைப் புரியவைக்கும் வகையிலும் அவர்களுக்குத் தேவையான படப்பயிற்சித் தேவையை பூர்த்திசெய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள நூல். இப்பயிற்சிகளைச் செய்யும்போது உரிய நிறப் பென்சில்களை  உபயோகித்தல் அவசியமாகும். மலைகள், மேட்டுநிலங்கள், என்பனவற்றைக் குறிக்க கபில (பிரவுண்) நிறத்தாலும் நதி, கடல், ஏரி என்பனவற்றை நீல நிறத்தாலும், தாவரம் பயிற்செய்கை என்பனவற்றை பச்சை நிறத்தாலும் நிறந்தீட்டவேண்டும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18279).

ஏனைய பதிவுகள்

12640 – இலை மரக்கறிகள்.

விவசாயத் திணைக்களம். பேராதனை: விவசாயத் திணைக்களம், விவசாய காணி அமைச்சு, த.பெ.எண் 18, 1வது பதிப்பு, 1999.(பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவை). 26 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20