15872 பட வேலை: இட விளக்கவியற் பயிற்சிகள்(1:50,000).

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி,  2வது பதிப்பு, ஜனவரி 1994, 1வது பதிப்பு ஜுன் 1992. (யாழ்ப்பாணம்: மகாலக்ஷ்மி அச்சகம், 37, கண்டி வீதி).

48 பக்கம்,  வரைபடங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 28×22 சமீ.

படவேலை என்ற இந்நூல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக ஆக்கப்பட்டுள்ளது. 1: 50,000 என்ற அளவுத்திட்ட மெட்றிக் இடவிளக்கவியல் பற்றிய விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. புதிய பாடத்திட்டத்திற்கு இணங்க இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. புவியியில் விளக்கத்திலிருந்து புவியியல் நிலத்தோற்றத்தை எவ்வாறு வரையலாம் என்பதனை படிப்படியாக இந்நூல் விளக்குகின்றது. இலங்கை நில அளவைத் திணைக்களம் வெளியிட்ட 1:50,000 மெட்ரிக் இடவிளக்கவியற் படங்களில் சமவுயரக் கோடுகள் அக்காலகட்டத்தில் ‘அடி’யிலேயே காட்டப்பட்டிருந்த சூழ்நிலையில், பரீட்சைக்குக் கேட்கப்படும் கேள்விகளில் சமவுயரிகள் ‘மீற்றர்’ அளவுத்திட்டத்திலேயே கேட்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பரீட்சை நோக்கில் இந்நூல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18270).

ஏனைய பதிவுகள்

15963 பண்டைய இலங்கை.

வே.க.நடராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 468 பக்கம், விலை: