க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, ஜுலை 1984, 1வது பதிப்பு, ஜுலை 1979, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
80 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 28×22 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களின் புவியியல் பாடத்தின் படப் பயிற்சித் தேவையை இந்நூல் பூர்த்தி செய்கின்றது. புவியியில் விளக்கத்திலிருந்து புவியியல் நிலத்தோற்றத்தை எவ்வாறு வரையலாம் என்பதனை மாதிரி விளக்கப்படங்களுடன் படிப்படியாக இந்நூல் விளக்குகின்றது. புதிய பாடத்திட்டத்திற்கு இணங்க இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் ‘உலகப் பட வேலைப்பயிற்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்நூலின் முதலாம் பதிப்பில் இடம்பெற்ற உலகப் படப் பயிற்சிகள் இப்பதிப்பில் நீக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 79246).