15876 பௌதிகச் சூழல் நிலவுருவங்கள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: வி.மகாலிங்கம், ரேகா வெளியீடு, 82, பிறவுண் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்).

(8), 112 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 7.50, அளவு: 20×13.5 சமீ.

பௌதிகச் சூழல் நிலவுருவங்கள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: வி.மகாலிங்கம், ரேகா வெளியீடு, 82, பிறவுண் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 1982, 1வது பதிப்பு, ஜுன் 1979. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(8), 112 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 15.00, அளவு:20×14 சமீ.

1979ஆம் ஆண்டு புவியியல் உயர் வகுப்பு மாணவர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டம் இதுவாகும். பௌதிகக் சூழலுக்கேற்ப மனிதன் துலங்குவது பற்றிய உணர்வைக் கொண்டிருத்தலும், அபிவிருத்தியில் புவியியலின் பங்கை விளங்கிக் கொள்ளுதலும் இப் புதிய பாடத்திட்டத்தின் அடி ஆதாரமாகவுள்ளன. அறிவு பூர்வமான அணுகல் முறையைப் புவியியல் கல்வியில், நாட்டின் அபிவிருத்தியை மனதிற்கொன்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது இன்றைய தேவையாகும்.

இப்புதிய அணுகல் முறையின் முதல் நூலாக ‘ பௌதிகச் சூழல் – நிலவுருவங்கள்’ என்ற இந்நூல் வெளிவருகின்றது. இதில் ‘பாறைகள்’ (தீப்பாறைகள் – அடையற் பாறைகள் – உருமாறிய பாதைகள் – பாறைகளும் தரைத் தோற்றமும் – பாறை வட்டக் கொள்கை),  ‘புவியின் அமைப்பு’ (புவியின் உள்ளகம் – மிதக்கும் புவியோடு), ‘முதல் வகை நிலவுருவங்கள்’ (நிலப் பரப்பும் நீர்த்தொகுதியும், சமுத்திர வடிநிலம், சமுத்திர நீரோட்டங்கள், வற்றுப்பெருக்குகள், முருகைக்கற்பார், கண்டங்களினதும் சமுத்திரங்களினதும் தோற்றம் – கண்டநகர்வுக் கொள்கை),‘இரண்டாம் வகை நிலவுருவங்கள்’ (மடிப்பு மலைகள், இழு விசையும் குறையாதலும், எரிமலைகள், மேட்டு நிலங்கள், சமவெளிகள்), ‘மூன்றாம் வகை நிலவுருவங்கள்’ (வானிலையாலழிதல் – நீரரிப்பு – நதித் தொகுதி – ஆற்றுச் சிறை – நீரூற்றுகள் – ஏரிகள் – சுண் ணாம்புக் கற்பிரதேச நிலவுருவங்கள் – காற்றரிப்பு – பனிக்கட்டி யாற்றரிப்பு – கடலரிப்பு – கடற்கரையோரங்கள்), ‘தின்னல் வட்டக்கொள்கை’ ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14571, 16544).

பௌதிகச் சூழல் நிலவுருவங்கள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 6ஆவது பதிப்பு, ஜனவரி 1994, 1வது பதிப்பு, ஜுன் 1979, 5ஆவது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (யாழ்ப்பாணம்: மணிஓசை அச்சகம், 12, சென். பற்றிக்ஸ் வீதி).

(8), 132 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 70.00, அளவு: 20×13.5 சமீ.

இப்பதிப்பில் பாறைகள், புவியின் அமைப்பு, முதல்வகை நிலவுருவங்கள், இரண்டாம் வகை நிலவுருவங்கள், மூன்றாம் வகை நிலவுருவங்கள், நதித் தொகுதி, நீரூற்றுக்கள், ஏரிகள், சுண்ணாம்புக் கல் பிரதேசம், காற்றரிப்பு, பனிக்கட்டியாற்றரிப்பு, கடற்கரையோரங்களும் கடலரிப்பும், தின்னல் வட்டம் ஆகிய பதினொர பாடங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18538).

ஏனைய பதிவுகள்

Free Spins To the Card Membership

Blogs Coin Master Totally free Spins And you will Coins, March step three Using 100 percent free Revolves Bonuses In your favor Exactly what are