எஸ்.ஏ.நோர்பேட் (பிரதம பதிப்பாசிரியர்), சோதிநாயகி பாலசுந்தரம், எஸ்.ஏ.எச்.ஹுஸ்னா (மொழிபெயர்ப்பாளர்கள்). கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2018. (கொழும்பு: விஸ்வா கிரபிக்ஸ்அச்சகம்).
x, 303 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 415., அளவு: 24×18 சமீ.
பௌதிகப் புவியியல் துறை பற்றிய க.பொ.த. உயர்தர மாணவர்களுக்குத் தேவையான பாடவிதானத்துக்கு உட்பட்ட அறிவை வழங்கும் உப பாடநூல் இது. புவித்தொகை, புவியின் அமைப்பும் உள்ளடக்கமும், புவியிற் செயற்படும் அகவிசைகள், நிலவுருவாக்கச் செயன்முறையும் புறவிசைகளும், வானிலையும் காலநிலையும், இலங்கையின் காலநிலை, காலநிலை மாற்றமடைதல், உலகின் நீர் வளமும் பரம்பலும் ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் குழுவில் தேவரஞ்சிதம் ஸ்ரீசுரேஸ்குமார், சிவலிங்கம் இளங்கோவன், ரி.சர்மிலாதர்ஷனி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65492).
மேலும் பார்க்க:
பௌதிகப் புவியியல்-2: சூழல் முகாமைத்துவமும் பாதுகாப்பும். 15241
புவியியல் புள்ளிவிபரவியல்.15167