15878 அபிவிருத்திப் புவியியல்: இந்தியா.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 7வது பதிப்பு ஒக்டோபர் 1993, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1985. (யாழ்ப்பாணம்: மகாலக்ஷ்மி அச்சகம், 37, கண்டி வீதி).

(4), 5-54 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 40.00, அளவு: 20×14 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தர வகுப்பு மாணவர்களின் அபிவிருத்திப் புவியியலின் ஒரு பகுதி, தனி ஆய்வாகும். அதில் ஆராயப்பட வேண்டிய நாடுகளில் ஓன்று இந்தியா. இந்தியாவின் அபிவிருத்திப் புவியியலை இந்நூல் விளங்குகிறது. பாடநூல் தேவையை மனதில் கொண்டு இந் நூல் ஏராளமான விளக்கப்படங்களுடன் ஆக்கப்பட்டிருக்கின்றது. புதிய புள்ளி விபரங்கள் கைக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் பௌதிகச் சூழல், இந்தியாவின் காலநிலை, இந்தியாவின் இயற்கை வளங்கள், இந்தியாவின் பண்பாட்டுச் சூழல், இந்தியாவின் பயிர்ச்செய்கை, இந்தியாவின் நீர்ப்பாசனம், இந்தியாவின் கைத்தொழில்கள் என ஏழு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14450).

ஏனைய பதிவுகள்