ம.முஹம்மது உவைஸ் (மூலம்), பீ.மு.அஜ்மல் கான் (பதிப்பாசிரியர்). மதுரை 625001: சர்வோதய இலக்கியப் பண்ணை, 32/1, மேல வெளி வீதி, 1வது பதிப்பு, மே 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(6), 383 பக்கம், விலை: இந்திய ரூபா 25.00, அளவு: 18×12 சமீ.
சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தமிழாராய்ச்சி மாநாட்டுக் கலாச்சாரச் சுற்றுலா, காதிறு நாவலர் கண்டிருந்தால், ஒர் திருக்கோயில், அண்ணாமலைக் கலைக் கழகம், பிச்சாவரக் காயலிலே, வரவேற்பு உபசாரங்கள், வெந்நீர் வழங்கிய அரிசி ஆலை, பிறந்தவர் பிறவாப் பெரும்பதி, நாகூர் ஆண்டகையின் நற்பதியில், வான் நோக்கி வாழும் வாய்ப்பின்மை, கீர்த்திமிகு தஞ்சை பெருவுடையார் கோவில், கலைக்காட்சிக் கவின் கூடம், தமிழ் வரவேற்பு, கிராமிய நடனங்கள், தமிழகத்து மான்செஸ்டர், மகளிர் கல்லூரி, கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர், சாந்தலிங்கம் அடிகளார் திருமடம், கவி அரங்கு, ஸ்ரீ அவிநாசிலிங்கம் கல்லூரி, சாரதாலயம், விதவிதமான விருந்துணவு, தென்னிந்தியாவின் அதென்ஸ் நகரம், புண்ணியம் புரி பூமி, வைகை நதிக்கரையில் குதூகலம், காந்தி நிலையம் என்றொரு சாந்தி நிலையம், தெப்பக்குளம் கண்டேன், தொழில் வள நகர், வலதுபாதம் தூக்கி ஆடும் நடராசர், அறுபத்தைந்தாவது திருவிளையாடல், அங்கையற்கண்ணி ஆலயம், நான்காம் தமிழ்ச் சங்கமும் அதன் நக்கீரரும், முஸ்லீம்களுக்கு முக்கியமான கோரிப்பாளையம், பாண்டிநாட்டு நங்கையின் மணிவயிறு, நெல்லைநகர் தந்த நல்வரவேற்பு, திருக்குறுங்குடி, நித்தம் தவம்செய் குமரி, சுசீந்திரத்தின் தனிச் சிறப்பு, கல்லும் கனிந்து இசைபாடும், வங்கக் கடலில் வளரும் கதிரோன், மூக்குத்தி காலித்த வைரஒளி, கிழக்கு நாட்டின் கெய்ரோ, யானையைக் கோழி வென்ற திருச்சிராப்பள்ளி, தாயும் ஆன செவ்வந்திநாதர் கோவில், அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய், தனிச்சிறப்புடன் திகழும் ஸ்ரீ ரங்கத் திருத்தலம், ஸ்ரீரங்கமும் திருவானைக்காவும், உழவுக்குப் பயனாகும் உயர்ந்த கல்லணை, தென்னகத்தின் அலிகார், மஞ்சு விரட்டு, இசைக்கோலம், இருந்தமிழே உன்னால் இருந்தேன் ஆகிய 52 தலைப்புகளில் ஆசிரியரின் பயண அனுபவங்கள் என இந்நூலில் விரிகின்றன. இந்நூலாசிரியர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமியத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய வேளையில் இந்நூலை எழுதியிருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12636).