குடும்பத்தினர். வவுனியா: அமரர் அன்னலட்சுமி யேசுதாசன் குடும்பத்தினர், பெரியதம்பனை, 1வது பதிப்பு, மார்ச் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
87 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவனியா பெரியதம்பனையை வசிப்பிடமாகவும், வவுனியா ஸ்ரீராம புரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு முதலி வழித்தோன்றலுமான ஓயவுபெற்ற ஆசிரியை அன்னலட்சுமி யேசுதாசன் (07.11.1953-25.02.2017) அவர்களின் மறைவை ஒட்டி வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர். வழமையான இரங்கல் செய்திகள், திருமுறைப்பதிகங்களுடன் இம்மலரில் தாய்மையைக் கருவாகக் கொண்ட ‘தாய்’ (வ.அ.இராசரத்தினம்), ‘அம்மாவின் பாவாடை’ (அ.முத்துலிங்கம்), ‘கோசலை’ (ரஞ்சகுமார்), ‘பாதுகை’ (குந்தவை), ‘அம்மாவின் உலகம்’ (த.கலாமணி) ஆகிய சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.