கனிவுமதி. கொழும்பு: ராக்கம்மாள் அறக்கட்டளை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
xx, 101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ.
இந் நூலில் பரவியிருக்கும் எழுத்துக்கள் யாவும் காலம் காட்டிய வர்ணஜாலங்களில் கரைந்துபோன ஒருவனின் கடைசிக் கால வாக்கு மூலங்கள். ஒரு தனி மனிதனைச் சுற்றி நடைபெறும் சூழல் நிகழ்வுகளே அவனது வாழ்வினை ஒவ்வொரு கட்டமாக மாற்றுகின்றது. அதுபோக அவன் தன் வாழ்வில் பிற மனிதர்களிடம் கொண்டுள்ள உறவு-நட்பு என்பவற்றைப் பொறுத்தே எவ்வளவு தூரம் பிறர் மனதில் அவன் நின்று நிலைப்பான் என்பதை எடுத்துச் சொல்லும் கண்ணாடியே காலம். கனகராஜா என்ற தனிமனிதனின் கடந்து வந்த பாதையை ஒரு சுயசரிதையாக கவிஞர் கனிவுமதி எழுதி வழங்கியுள்ளார்.