15890 நேருக்கு நேர்: என்.செல்வராஜா நேர்காணல்கள்.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜ{லை 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 142 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-659-676-2.

நேர்காணல்களைப் பலவகைகளுக்குள் அடக்கலாம். அரசியல், சமயம், இலக்கியம் எனப் பல்வகை ஆளுமைகளை அவர்களின் தெரிவு, அவர்களின் சமகால, எதிர்கால செயல்பாடுகள் குறித்த அனுபவ வெளிப்பாடுகளை தங்கள் கேள்விகள் மூலம் அச்சு, ஒலி, ஒளி ஊடகங்களுக்கூடாக அவர்களின் பதில்களைக் கொண்டுவருதலாகும். அங்கு கேள்விகளைத் தொடுப்பவர்களின் ஆளுமைகளுக்கு ஈடாகப் பதில்களைச் சரியான தளத்திற்கேற்ப ஆளுமைகளிடமிருந்து பெறுதலே சிறப்பைத்தரும். அந்த வகையில் தினக்குரல், நவமணி, ஞானம், காதல், தினகரன், ஈழமுரசு(கனடா), மலேசிய நண்பன் போன்ற பல ஊடகங்களின் வாயிலாக ம.நவீன், தி.ஞானசேகரன், சந்திரசேகரன்(இனிய நந்தவனம்), இ.மகேஸ்வரன், ஜெ.கவிதா, ராம், இராஜேந்திரன்(மலேசிய நண்பன்) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களில் அவர்களின் கேள்விகளுக்கான பதிலைச் சரியாகவும், ஆணித்தரமாகவும் நூலகவியலாளர் என்.செல்வராஜா வழங்கியிருக்கிறார். தேர்ந்த பத்து நேர்காணல்களையே இங்கு இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு தளங்களில் கேள்விகளைக் கேட்டு சுவாரஸ்யமான பதில்களைப் பெற்ற நேர்காணல்களை இங்கு இடம்பெறச் செய்துள்ளார்;. இந்நூல் ஒரு ஈழத்து நூலகவியலாளரின், ஊடகவியலாளரின், எழுத்தாளரின், ஆவணக்காப்பாளரின் வாழ்வும் பணிகளும் பற்றிய பதிவாக அமைகின்றது.

மேலும் பார்க்க: குமராலயம்: அமரர் சின்னத்துரை குமரவேல் நினைவு மலர் 15899

ஏனைய பதிவுகள்

12109 – திருத்தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாச் சிறப்பு மலர்

1999. வே. வரதசுந்தரம் (மலர் ஆசிரியர்). தம்பலகாமம்: அறங்காவலர் அவை, ஆதிகோணநாயகர் கோயில் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 68 பக்கம், புகைப்படங்கள்,