இரா.வை.கனகரத்தினம். கொழும்பு: அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடு, 1வது பதிப்பு, மார்கழி 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xiii, 78 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 23×15 சமீ.
இந்நூலில் காலமும் சூழ்நிலையும், சமயப்பணி, சைவசித்தாந்த நோக்கு, கல்விப்பணி, பதிப்பும் உரையும், புலமையாளர், சமுதாயப் பணிகள், சமூக நோக்கு ஆகிய எட்டு இயல்களில் ஆறுமுக நாவலரின் வாழ்க்கை வரலாறு அவரது வாழ்வும் பணிகளும் என்ற விரிந்த நோக்கில் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றியவர். இந்நூலின் பின்னிணைப்பில் ஆறுமுக நாவலர் வெளியிட்ட நூல்களின் விபரமும் காணப்படுகின்றது.