துரை.சுவேந்தி (இயற்பெயர்: அருள்நிதி துரைராஜா சுவேந்திரராஜா). சுவிட்சர்லாந்து: அறிவு ஆய்வாளர் வளாகம், சிவஞான சித்தர் பீடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 13: கு.வி. அச்சக புத்தக விற்பனை நிலையம், 58, கிறீன் லேன்).
viii, 149 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ.
இந்நூலாசிரியர் சுவிட்சர்லாந்து, சிவஞான சித்தர் பீடத்தின் அறிவு ஆய்வாளர் வளாகத்தின் ஆங்கில பாட ஆசிரியராகவும் மனவளக்கலை மன்றத்தின் யோகக்கலை ஞான ஆசிரியராகவும் சேவையாற்றுகின்றார். இந்நூலில் ஈழத்துச் சித்தர்களான கடையிற் சுவாமிகள், பரமகுரு சுவாமிகள், குழந்தைவேல் சுவாமிகள், அருளம்பல சுவாமிகள், யோகர் சுவாமிகள், ஆத்மஞானி பொன்னையா நடராசா சாத்திரியார், பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள் பூர்வாச்சிரமம், சடைவரத சுவாமிகள், ஆனந்த சடாட்சர குரு, செல்லாச்சி அம்மையார், தாளையான் சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், சிவஞானர் பெரியண்ணா சுவாமிகள், சிவக்கண்ணு மருதப்பு சுவாமிகள், சடையம்மா, நாகநாத சித்தர், நயினாதீவுச் சுவாமிகள், சிவ.சண்முகவடிவேல் சுவாமிகள், நவநாதச் சித்தரின் சித்துக்கள் ஆகிய இருபது சித்தர்கள் பற்றிப் பல்வேறு தகவல்களையும் திரட்டி தனித்தனிக் கட்டுரைகளாகத் தந்துள்ளார்.