யாழ்ப்பாணம்: சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு நிறைவு விழாச் சபையினர், வெள்ளியம்பதி, அளவெட்டி, 1வது பதிப்பு, 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(12), 116 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு வெளியிடப்பெற்றுள்ள இச்சிறப்பு மலரில் சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களின் உயர் தனிப் பெருமை (சி.கணபதிப்பிள்ளை), சைவத் தமிழ் மரபு பேணிய பெரியார் (ச.சிதம்பரப்பிள்ளை), சிவபாதசுந்தரனார் சமயநெறி (க.கார்த்திகேசு), நான் கண்ட சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் (பொ.சங்கரப்பிள்ளை), சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்கள் சைவசித்தாந்த ஞானாசிரியரா? (ஏ.ஆறுமுகம்), சிவபாதசுந்தரனாரின் நினைவுகள் (மு.மயில்வாகனம்), கொட்டிலிற் குடியிருந்த குரவர் (ஆர்.என். சிவப்பிரகாசம்), திருவாசகம் என்னும் தேன் (சி.ஆறுமுகம்), சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்களின் சீடர்கள், மாணவர்கள், அன்பர்கள் மலாயாவில் ஈடுபட்ட சைவசமயப் பணிகள் (மலேசியப் பணிக் குழுவினர்), சைவப்பெரியார் சிவபாதசுந்தரனாரும் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணியும் (ஆ.தம்பையா), சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவஞ்சலி பாமாலை (க.கி.நடராஜன்), சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனாரின் உரைநடைப் பாங்கு (க.சொக்கலிங்கம்), கந்தவன முனிவரிடம் யான் கண்டவை (க.கி.நடராஜன்), இந்து நாகரிகம் பேணிய சைவப் பெரியார் (கா.கைலாசநாதக் குருக்கள்), சைவப் பெரியார் பற்றிய சில சிந்தனைகள் (ச.அம்பிகைபாகன்), ஈழத்தாய் பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டு (மு.ஞானப்பிரகாசம்), நான் போற்றும் சைவப் பெரியார் (அ.சின்னையா), காணுதலும் காட்டுதலும் (தங்கம்மா அப்பாகுட்டி), சைவப் பெரியாரின் நூலாசிரியத் தகைமை (க.சி.குலரத்தினம்), மாமனும் மருகரும் (ச.அமிர்தாம்பிகை), தோத்திரத் தோற்றம் – பாடல்கள் (புலவர் நா.சிவபாதசுந்தரம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் (சி.ஆறுமுகம்), எனது குருமணி (அருள் தியாகராசா), சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனாரின் கந்தவன வாழ்வு (வி.நடராசா), எமது குருவிடம் யான் பெற்றவை (சு.வேலுப்பிள்ளை), எதற்காக இவர் நினைவு (மு.கந்தையா), சீர்திருத்தச் செம்மல் (ந.சபாரத்தினம்), கருதுசிவ சமயமது வளர்த்த ஞானி-ஆசிரிய விருத்தம் (செ.சிவப்பிரகாசம்) ஆகிய தமிழ்க் கட்டுரைகளும், Siddhantin Sivapadasundaram (RT.Mailvahanam), The Essence of Saivaism (K.Vajravelu Mudaliyar), Saiva Periyar Sivapadasundaram (C.Loganathan), Social and Economic Reform in Less Developed Countries (C.Loganathan), B.A.Master-an Autobiographical Fragment (S.Durai Rajasingam), Thoughts on Saiva Periyar (C.Subramaniam), Shaiva Periyar Sivapadasundaram (K.Krishnapillai), Foot Prints on the Sands of Time (N.Sabaratnam)ஆகிய ஆங்கிலக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28524).