எப்.எக்ஸ்.சி.நடராசா, மா.சற்குணம் (மூலம்), க.தா.செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 3வது பதிப்பு, வைகாசி 2005, 1வது பதிப்பு, 1979. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).
xxxvi, (3), 28 பக்கம், விலை: கனேடிய டொலர் 10.00, அளவு: 20.5×13.5 சமீ.
‘நாவலர் பெருமான் வாழ்க்கைக் குறிப்புகள்’ எப்.எக்ஸ்.சி.நடராசா அவர்களால் முதற் பதிப்பாக 1979இல் வெளியிடப்பட்டிருந்தது. புதுக்கிய இம் மூன்றாவது பதிப்பில் முதற் பதிப்பின் தகவல்களுடன், நூலாசிரியர்களின் வரலாறு, நாவலர் பெருமான் நினைவு முத்திரைகள், முதலாம் பதிப்பின் பதிப்பாசிரியர் உரை, இரண்டாவது பதிப்பு பற்றிய தகவல், புதுக்கிய 3ஆவது பதிப்பின் தொகுப்பாசிரியர் உரை, நாவலர் பெருமானின் திருவுருவப் படம், நாவலருக்கு எடுத்த சிலைகள், நாவலரின் தாயகம், ஆறுமுக நாவலர், தொகுப்பாசிரியரின் தமிழ்ப் பணிகள் என வேறும் பல விடயங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3702).