நினைவு மலர்க் குழு. சுன்னாகம்: அமரர் சின்னத்துரை குமரவேல் நினைவுமலர்க் குழு, திருவேரகம், முத்துக்கிருஷ்ணர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 56, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
78 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
அமரர் சின்னத்துரை குமரவேல் (01.12.1945-13.01.2021) அவர்களின் மறைவையொட்டி 31ஆம் நாள் நிகழ்வின்போது வெளியிடப்பட்ட நினைவு மலர். பல்வேறு சமூகப் பிரமுகர்களினது நினைவஞ்சலிகளை உள்ளடக்கிய இம்மலரில் அமரர் குமரவேல் 2014இல் எழுதிய சுன்னாகம் பொது நூலகம் பற்றிய வரலாற்றுக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. அமரர் சி.குமரவேல் அவர்கள் 1964இல் சுன்னாகம் பொது நூலகம் திறக்கப்பட்டவேளை அதன் நூலகப் பொறுப்பாளராகப் பதவியேற்றவர். 1974இல் சமாதான நீதவானாகப் பதவியேற்றவர். 1978இல் உள்ளூராட்சி திணைக்களம் நூலகர்களுக்கான நியமனங்களை பொறுப்பேற்ற வேளையில் இவரும் தரம் 3 நூலகராக உள்வாங்கப்பட்டு சுன்னாகம் நூலகத்தில் உதவி நூலகராகவும் நூலகராகவும் பணியாற்றினார். 27 வருட நூலகசேவையின் பின்னர் 1991இல் சுயவிருப்பில் பணிஓய்வுபெற்று தன்னை முழுமையாக சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டார். கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் இருந்து 35 ஆண்டுகாலம் சேவையாற்றியவர். சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்கத் தலைவர், விவாகப் பதிவாளர், ஆலய பரிபாலன சபைத் தலைவர் எனப் பல சமூக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தியவர் இவர்.