வெல்லவூர்க் கோபால் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: அமரர் நல்லையா நினைவுப் பணி மன்றம், 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: C.B.C. அச்சகம்).
234 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-955-42694-1-5.
வல்லிபுரம் நல்லையா (10.09.1909-27.12.1976) இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமாவார்.
மட்டக்களப்பு, புளியந்தீவு கிராமத்தில் பிறந்த இவர் புனித மிக்கேல் கல்லூரியில் படித்து, லண்டன் மெற்ரிக்குலேசன் கலைப் பட்டதாரி ஆனார். மஹரகம ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார். 1929இல் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நல்லையா, 1937இல் அப்பாடசாலையின் பிரதி அதிபரானார். அமரர் நல்லையா பற்றிய இந்நூலில் பல்வேறு சமயப் பிரமுகர்களின் ஆசியுரைகளும், புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, சே.சீவரத்தினம், பொன் தவநாயகம், செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அஞ்சலிக் கவிதைகளும், அமரர் நல்லையா பற்றிய இலக்கிய கலாநிதி எப்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் நேர்காணலும், கவிக்கோ வெல்லவூர் கோபால், வி.சிவசப்பிரமணியம், எஸ்.காசிநாதன், மா.செல்வராஜா, றூபி வலன்ரினா பிரான்சிஸ், வி.பஞ்சாட்சரம், எஸ்.எதிர்மன்னசிங்கம், கோ.கணேசபிள்ளை, எஸ்.பரராசசிங்கம், எஸ்.சாமித்தம்பி, எஸ்.எஸ்.மனோகரன், சட்டத்தரணி சி.சாமித்தம்பி, மண்டூர் ச.கலைவாணி, அமீர் அலி, எஸ்.புண்ணியமூர்த்தி ஆகியோரின் (கட்டுரை வடிவிலான) மலரும் நினைவுகளும் இடம்பெற்றுள்ளன.