15902 இலங்கை முஸ்லிம் அரசியலில் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் தலைமைத்துவம்.

ஆதம்வாவா சர்ஜுன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 218 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-706-6.

கடந்த நூற்றாண்டின் இறுதி இரு சகாப்த காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு என தனித்துவமான முஸ்லிம் அரசியல் கட்சியாக விளங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்து வளர்த்தெடுத்து அதனை தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக பரிணமிக்கச் செய்ததன் மூலம் இலங்கை முஸ்லிம் அரசியலிலும் தேசிய அரசியலிலும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முக்கியமான ஆளுமையாக மேற்கிளம்பினார். இந்நூல் அமரர் அஷ்ரஃப்பின் தலைமைத்துவ ஆளுமை பற்றியும் இலங்கை முஸ்லிம் அரசியலுக்கும், முஸ்லிம் சமுதாயத்துக்கும், முழுத் தேசத்துக்குமான அவரது பங்களிப்புப் பற்றியும் ஆராய்கின்றது. அறிமுகக் குறிப்புகள், ஓர் இளம் அரசியல் நாயகன் அஷ்ரஃப்: பிறப்பும் இளமைப் பருவமும், சட்டக் கல்வி வழக்கறிஞர் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை, அரசியல் பிரவேசம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கம், ஆரம்பகாலத் தேர்தல்களும் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பலமும், 1994 பொதுத் தேர்தல் பலமும் பேரம்பேசும் அரசியலும், அஷ்ரஃப்பின் அரசியல் ரீதியிலான பங்களிப்புகளும் சாதனைகளும், அஷ்ரஃப்பின் சமூக நலச் செயற்பாடுகளும் சாதனைகளும், அஷ்ரஃப்பின் பொருளாதார ரீதியான பங்களிப்புகளும் சாதனைகளும், இன ஐக்கியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான பாதையில் அஷ்ரஃப், 2000ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலும் அஷ்ரஃப்பின் தடுமாற்றங்களும், விமர்சன அரசியலுக்குள் அஷ்ரஃப், அஷ்ரஃப்பின் மரணமும் அஷ்ரஃப் இல்லாத முஸ்லிம் அரசியலும், முடிவுக் குறிப்புகள் ஆகிய 15 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்