15906 சிவஜோதி எனும் ஆளுமை.

த.ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). கிளிநொச்சி: லிற்றில் எய்ட், கனகராசா வீதி, திருநகர், 1வது பதிப்பு, மார்ச் 2021. (யாழ்ப்பாணம்: ஜெம்ஃபார் JEMFAR அச்சகம், உடுவில்).

(6), 214 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

கிளிநொச்சி லிட்டில் எய்ட் சமூக சேவை அமைப்பின் இயக்குநரான அமரர் வயித்தீஸ்வரன் சிவஜோதியின் (18.11.1971-30.12.2020) நினைவாக வெளியிடப்பட்ட இரங்கலுரைகளினதும், அவர் பற்றிய மலரும் நினைவுகளினதும் தொகுப்பு இதுவாகும். ஆளுமை பற்றி, சிவஜோதி வழங்கிய நேர்காணல், கூடித்திரிந்த காலம், புதிய ஆரம்பம், நீ பாதி நான் பாதி, லிட்டில் எய்டும் கிளிநொச்சியும், சிவஜோதி எனும் ஆளுமை, காலங்களில் அவன் வசந்தம் ஆகிய தலைப்புகளின் கீழ் அமரர் சிவஜோதி பற்றிய மலரும் நினைவுகளை அவரது நண்பர்களும் பள்ளித் தோழர்களும், சக சமூக சேவகர்களும், நிர்வாகிகளும் இணைந்து இந்நூலில் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்நூலுக்கான பதிப்பு அனுசரணையை யாழ். விக்ரோரியாக் கல்லூரிப் பழைய மாணவர்கள் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

14018 ஐம்பது ஆண்டு பாராளுமன்ற அனுபவம்(50 Years as Lobby Correspodent).

எஸ்.தில்லைநாதன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, மார்ச் 2014. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). xvii, 226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: