செழியன் (மூலம்), சி.மோகன் (பதிப்பாசிரியர்). சென்னை 600005: வாழும் தமிழ், 44, முதல் தளம், 5ஆவது தெரு, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை 600005: ஜோதி அச்சகம், திருவல்லிக்கேணி).
(10), 220 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ.
இது கவிஞர் செழியனின் ஒரு குறிப்பிட்ட காலத்துச் சுயசரிதையாக மலர்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய ஆரம்பகால பதிவுகளில் முக்கியமான ஒன்று. சுயசரிதைத் தன்மையிலான இப்படைப்பில் ஒரு போராளி வேட்டையாடப்படுவதற்காக விரட்டப்படும் போது நம்பிக்கையிழந்திருந்த மனநிலையில் பயமும் மேவிக் கலந்து உயிர் தரித்திருப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் கால் தடங்களின் பதிவுகள் எம்மை அதிரவைக்கின்றன. கனடாவில்- தாயகம் இதழில்; ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து’ என்ற தலைப்பில் தொடராக முதலில் வெளிவந்தது. கனேடியன் நியூ புக் பப்ளிக்கேஷன் (ரொறொன்ரோ) பதிப்பகத்தால் அதே பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டது. பின்னர் ‘காலம்’ சஞ்சிகையின் வாழும் தமிழ் வெளியீடாக மீண்டும் வெளியாகியுள்ளது. செழியன் ஈழப் போராட்டத்தின் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். கவிஞரும் நாடகருமான இவர் மரணத்தின் வாழ்வு எனற கவிதைத் தொகுப்பின்மூலம் அறிமுகமானவர். ஈழ விடுதலைப் போராட்ட அரசியலுக்கு முன்னதாக கிராமிய உழைப்பாளர் சங்கத்துடன் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்.
மேலும் பார்க்க: சொல் யாராக இருக்கலாம் நான்: 15948