ஆரையம்பதி க. சபாரெத்தினம். மட்டக்களப்பு: நாகப்பர் கணபதிப்பிள்ளை நினைவுக் குழு, ஆரையம்பதி, 1வது பதிப்பு, ஜுன் 1990. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).
(2), 33 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இது ஒரு பரீட்சார்த்தமான நினைவுமலர் உருவாக்கமாகக் கருதப்படுகின்றது. சபாரத்தினம் அவர்கள், தனது தந்தையாரான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், அமரர் நாகப்பர் கணபதிப்பிள்ளை (05.11.1906-15.05.1990) அவர்களின் மறைவின்போது வெளியிடப்பட்ட மலரினை ஒரு வாழ்க்கை வரலாறாக, தானே கதை சொல்லியாகவிருந்து ஒரு தந்தையின் வாழ்வு முறைகளை, தான் கூடவிருந்து அவதானித்த, அனுபவித்த வாழ்க்கை நிகழ்வுகளை சுவாரஸ்யமாக விபரிக்கின்றார். பிறப்பும் கல்வியும், ஆசிரிய சேவையில் சாதனைகள், கந்தப்பர் ஆசிரியர், பள்ளிக் குடியிருப்புப் பிள்ளையார், விடாக்காய்ச்சல், முத்துக்குமாரின் வைத்தியப் பின்னணி, பிள்ளைப்பேற்று வைத்தியம், கந்தரீஸ் அப்புவும் சேருவில விகாரையும், ஆசிரிய பயிற்சி, கலைவிழா, ஆங்கில ஆசிரியர் அருட்பிரகாசம், ஆனைக்குட்டிச் சுவாமிகள், தலைமை ஆசிரியர் இஸ்மாயில், வித்தியாதரிசி கனகசபை, ஸ்ரீ வீரபத்திர காளி அம்மன், ஆசிரியர் சங்கம் உதயம், பிறப்பும் இறப்பும் பற்றி சிறு ஆய்வு ஆகிய தலைப்புகளில் மூன்று அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.