15913 கிழக்கிலங்கைத் தமிழாசிரியர்களின் தந்தை பண்டிதர் செ.பூபாலபிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

ஒஎை, (14), 28-140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: கனேடிய டொலர் 10.00, அளவு: 21×14 சமீ.

பண்டிதர் செ.பூபாலபிள்ளை மட்டக்களப்பின் ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மண்டூர் வடிவேல் முருகன் இரட்டை மணிமாலை, கதிர்காம வடிவேலவர், உழவர் கைநூல், திருமுருகன் திருவிளையாடல், யாழ்நூல் தந்தோன், விபுலானந்தர் மணிமொழி நாற்பது உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர் இவர். இவரது வாழ்க்கை வரலாறு, பண்டிதர் செல்லப்பா பூபாலபிள்ளை வாழ்க்கைக் குறிப்புகள், மங்கையர்க்கரசி என்னும் மகளின் மனதில் மலரும் நினைவுகள், மட்டக்களப்பு மண்ணுக்கும் மக்களுக்கும் பணியாற்றிய மாமனிதர் அமரர் பண்டிதர் செ. பூபாலபிள்ளை, எண்ணித் துணிவார் கருமம் துணிந்தபின் இழுக்கென்று கைவிடார் அந்தத் திண்ணியரே அமரர் செ. பூபாலபிள்ளைப் பண்டிதர், பண்டிதர் செ. பூபாலபிள்ளை அவர்கள் சிந்திய சிந்தனைத் துளிகளிற் சிலவும் வாழ்க்கைப் புகைப்படத் தொகுதியும், மூதறிஞர் பூபாலபிள்ளை, எதிலும் புதுமை, புத்துணர்ச்சி, புத்தூக்கம், புலமைத்துவம், அத்தனையும் தமிழ்ப் பண்பாட்டு வழியில், திகடசக்கரன், வாழ்க்கை வரலாற்று வெண்பா, மண்ணின் மைந்தன், நோக்கம் போக்கு-ஆக்கம் தாக்கம் ஆகிய தலைப்பிலான ஆக்கங்களின்; வழியாக இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3987). 

ஏனைய பதிவுகள்

Apuestas Deportivas En internet

Content ¿cuál es Nuestro Entretenimiento Más Acreditado Referente a Mr Bet Casino? Haya La Confort Usando Casino Móvil ¿podría Juguetear Los Juegos Sobre Casino Referente