15915 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர் 1892-1992.

செ.அழகரெத்தினம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, 1992. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேசா அச்சகம், இல. 5, வித்தியாலயம் வீதி).

(14), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

இந்நூற்றாண்டு நினைவுமலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ஆநந்தப் பத்து (தாமரைத்தீவான்), விபுலாநந்த அடிகளின் கல்விச் செயன்முறைகள் ஒரு கண்ணோட்டம் (செ.அழகரெத்தினம்), ரிஷிமூலம் (வ.அ.இராசரத்தினம்), விபுலாநந்தரும் கல்வியும் (க.தியாகராஜா), தென்றலின் மறுபிறவி (கவிஞர் அகளங்கன்), கவிதையில் நான் கண்ட விபுலாநந்தர் (பாலேஸ்வரி நல்லரெட்ண சிங்கம்), சுவாமி விபுலாநந்தரின் தொல்லியல் ஆய்வுகள் தரும் உண்மைகள் (க.தங்கேஸ்வரி), குயில்கள் கூவும் (கவிஞர் எஸ்.முத்துமீரான்), விபுலாநந்தரின் தமிழ் (அன்புமணி), திருமா முனிவர் (தாபி.சுப்பிரமணியம்), புரட்சித் துறவி (எஸ்.எதிர்மன்னசிங்கம்), யாழ் நூல் பிறந்த கதை (சிவ விவேகானந்த முதலியார்), முழுக்கடனும் தீர்ப்போம் (ஆலையூரன்), சமுதாயத்தில் மனித மேம்பாடுகளைக் காணத் துடித்த சுவாமி விபுலாநந்தர் (நா.புவனேந்திரன்), விபுலாநந்த அடிகளாரின் ஆன்மீகப் பணி (அ.சுப்பிரமணியம்), பற்றறாத் துறவி விபுலாநந்த அடிகள்- (வீ.தி.அ.தில்லைநாதர்), ஈழத்தமிழ் வித்தகர் (ஈச்சையூர்த் தவா), விபுலாநந்தர் விரும்பியவை (ந.நடராசா), கரும யோகம் (அருட்திரு விபுலாநந்த அடிகள்), வள்ளல் திருவுளத்தைச் சூழ்தலால் உண்டு சிறப்பு (மருதூர்க் கொத்தன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இம் மலர்க்குழுவின் உறுப்பினர்களாக செ.அழகரெத்தினம், இரா.நாகலிங்கம், எஸ்.எதிர்மன்னசிங்கம், க.தங்கராஜா, தாபி சுப்பிரமணியம், எஸ்.நவரெத்தினம், பால சுகுமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

15232 ஆகாயத் தாக்கற் பாதுகாப்பு விதி: ஏ.ஆர்.பீ. விதி.

அ.கோல்டிகற்;. இலங்கை: சிவில் பாதுகாப்பு கொமிஷன், 1வது பதிப்பு, 1942. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). v, 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. “இது ஒவ்வொருவரும் கைக்கொள்ளுதற்குரியது” என்ற அறிவுறுத்தலுடன்