கு.முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை. சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களின் எண்பத்தாறாம் ஆண்டு நிறைவுவிழாக் குழு, மயிலணி, 1வது பதிப்பு, 1986. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவருக்கும், சின்னாச்சி அம்மையாருக்கும் 15.03.1900 அன்று மகனாகப் பிறந்தவர் முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையவர்கள். சுன்னாகம், அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தன் ஆரம்பக் கற்றல் அனுபவத்தைப் பெற்ற இவர் தொடர்ந்து யாஃமல்லாகம் ஆங்கில பாடசாலை, யாஃ கந்தரோடை ஆங்கில வித்தியாசாலை, யாஃமானிப்பாய் இந்துக் கல்லூரி, யாஃமத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பயின்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி, திருச்சி அர்ச். சூசையப்பர் கல்லூரி ஆகியவற்றில் உயர் கல்வியையும் கற்றுத் தேறியவர். 1922இல் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் ஆசிரியராகச் சில காலம் (1922-1923) பணியாற்றிய பின்னர் 1923இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இணைந்து இடைக்கலை வகுப்பில் சிலகாலமும், பின்னர் சென்னைக்குச் சென்று 1926 வரை பச்சையப்பன் கல்லூரியில் தன் இடைக்கலை வகுப்பைத் தொடர்ந்து பூர்த்தியாக்கியவர். அங்கிருந்து 1927முதல் திருச்சி அர்ச்.சூசையப்பர் கல்லூரியில் பீ.ஏ. படிப்பைத் தொடர்ந்து 1929இல் நிறைவுசெய்தவர். 1931 இல்; சென்னை லோயலாக் கல்லூரியில் சிலகாலம் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் நாடு திரும்பி 1934 முதல் இவர் சைவ வித்தியாவிருத்திச் சங்கப் பாடசாலைகளில் 25 வருடங்கள் வரையில் அதிபராகப் பணியாற்றி 15.03.1960இல் இளைப்பாறியவர். இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை பல்வேறு தமிழறிஞர்களின் வழியாகப் பெற்றுப் பதிவுசெய்திருக்கிறார்கள்.