மலர்க் குழு. கல்முனை: அல்மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை, நிந்தவூர், 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 13: பசிபிக் அச்சகம், 267, ஆட்டுப்பட்டித் தெரு).
36 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×16.5 சமீ.
இந்நூல் ஜனாபா எம்.செயினுலாப்தீன் அதிபர் அவர்களின் 38 வருட சேவையை கௌரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 05.05.1938 இல் பாடசாலைச் சிறுமியாக நிந்தவூர் அல்மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கத் தொடங்கிய இவர் தனது ஆசிரியர் பயிற்சிக் காலம், பொத்துவிலில் உதவி ஆசிரியையாகக் கடமையாற்றிய காலம், ஆகியவை தவிர்ந்த சுமார் அரை நூற்றாண்டு காலத்தை மாணவியாகவும், உதவி ஆசிரியையாகவும், அதிபராகவும் இப்பாடசாலையிலேயே கழித்துள்ளார். இப்பாடசாலையின் அதிபராக 33 வருடங்கள் சிறப்புறப் பணியாற்றி 25.08.1992 அன்று ஓய்வுபெற்றுச் செல்லும் ஜனாபா எம்.செயினுலாப்தீன் அவர்களைப் பாராட்டும் முகமாக இச்சிறப்பிதழ் பல்வேறு வாழ்த்துரைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.