மலர்க் குழு. கல்முனை: அமரர் திருமதி திரவியம் இராமச்சந்திரன் நினைவு இதழ் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, மே 1998. (மட்டக்களப்பு: ஆதவன் ஓப்செட் பிரின்டர்ஸ், அரசடி).
71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் திருமதி திரவியம் இராமச்சந்திரன் (03.10.1919-16.04.1998) அவர்களின் நினைவஞ்சலி மலர். கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் பாடசாலை ஆகியவற்றின் ஆசிரியராகவும், மட்டக்களப்பு தாண்டவன் வெளி பெண்கள் பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றியவர். பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கும் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும், எஸ்.பி.எஸ். (தமிழ்) வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், முதியோர் சங்கம், இரட்சணிய சேனை ஆகியவற்றின் அங்கத்தவராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றியவர். மனோன்மணியம் (1948), பாண்டியன் பரிசு (1956), கடல் கண்ட கனவு (1958), பார்த்திபன் கனவு (1959), அம்பை வென்ற அன்பு (1969) ஆகிய நாடகங்களையும், உத்தமன் பரதன் (1967), செஞ்சோற்றுக் கடன் தீர்த்த செம்மல் (1968), கோலியாத்தை வென்ற குமரன் (1970), பாலன் பிறந்தான் (1970) ஆகிய நாட்டுக் கூத்துகளையும் எழுதித் தயாரித்து மேடையேற்றியவர். இவரது நினைவுகளை பேராசிரியர் சு.வித்தியானந்தன் (Capable and talented lady), தங்கராஜா நடராஜா (Her life has been full), பிரின்ஸ் காசிநாதர் (Mrs.T.Ramachandra: A tribute), எஸ்.பொன்னுத்துரை (உள்ளொளி நிறைந்த கலை இலக்கிய ஊழியர்) ஆகியோர் இம்மலரில் பதிவுசெய்துள்ளார்கள்.