தா.அமிர்தலிங்கம் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர்கள், இணுவில் சைவ மகாஜனா வித்தியாலயம், இணுவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (யாழ்ப்பாணம்: சண்ஷைன் கிரப்பிக்ஸ், காங்கேசன்துறை வீதி, இணுவில்).
xviii, 122 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 25×20 சமீ.
பாடசாலை அதிபர் வ.நடராசாவின் நூற்றாண்டு விழாவையொட்டி வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஆக்கப்பட்ட மலர் இது. இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இம்மலரின் முதற்பாகத்தில் வித்தியாலயத்தின் வரலாறும் அதிபர் நடராசாவின் வாழ்வியல் பணிகளும் 10 ஆக்கங்களின் வழியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாவலர் வழியில் சைவ மகாஜனா வித்தியாலயம் (அ.பஞ்சாட்சரம்), இணுவில் சைவ மகாஜனா வரலாறும் அதிபர் நடராசாவின் வழிகாட்டலும், ஆளுமை நிறைந்த அதிபர் (இ.கந்தசாமி), அமரர் வைத்திலிங்கம் நடராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு சீரிணுவைத் திருவூரின் சேவையால் உயர்ந்த ஆசான் (மூ.சிவலிங்கம்), வழிகாட்டும் வளங்கொண்ட வாண்மையுள்ள அதிபர் (கு.சண்முகநாதன்), இணுவையம்பதி தந்த இணையிலா ஆசான் (திருமதி மகாலிங்கம்), தலைமை ஆசிரியர் வ. நடராசாவும் சமகால அதிபர்களும் (செ. சோதிப்பெருமாள்), சமகால அதிபர்கள், ஆசிரியர்கள், சமகால வைத்தியர்கள், இணுவில் சைவ மகாஜனா கல்வி முறையும் அதிபர் வ.நடராசா அவர்களின் பங்கும் (தா.அமிர்தலிங்கம்), சைவ மகாஜனா வித்தியாலய அதிபர் வ.நடராசா அவர்கள் பற்றி ஓர் மதிப்பீடு (த.கைலாசநாதன், எஸ்.மாறன், பா.தனபாலன்), பின்னிணைப்பு ஆகியவை இப்பாகத்தில் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பாகத்தில் ஆசிரியத்துவ ஆற்றுகையும் கல்வி முகாமைத்துவ பிரயோகங்களும் (எஸ்.கே.யோகநாதன்), இணுவில் மத்திய கல்லூரி பற்றிய நோக்கு (அ.சதானந்தன்), குருகுலக் கல்வி அன்றும் இன்றும் (கா.சசிதரன்), அறிவுசார் மூலதனம் (க.தேவராஜா), ஒழுக்கவியல் ஒரு நோக்கு (செ.பாலச்சந்திரன்), கட்டுருவாக்கமும் ஆசிரியர் வகிபாகமும் (ஏ.எல்.ஜோர்ஜ்), தியானம் (மா.சண்முகரத்தினம்), ஆசிரிய வாண்மையை விருத்தியாக்கும் கல்வியியல் ஆய்வுகள் (பா.தனபாலன்), சைவநெறி வளர்த்த சைவ மகாஜனா வித்தியாலயம் (கே.எஸ்.ஆனந்தன்) ஆகிய கல்வியியல்சார் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.