15921 நாவலர் மாநாடு விழா மலர்.

மலர்க் குழு. கொழும்பு 2: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 91/5, சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஆனி 1969. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட், 161, செட்டியார் தெரு).

(388) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×21 சமீ.

நாவலர் மாநாடு விழா மலர். மலர்க் குழு. கொழும்பு 2: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 91/5, சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, 2வது பதிப்பு, வைகாசி 2013, 1வது பதிப்பு, ஆனி 1969. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

(32), 310 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 26×21 சமீ. , ISBN: 978-955-4768-00-0

நான்கு பெரும்பிரிவுகள் கொண்ட இம்மலரில் முதலாம் பிரிவில் முப்பது ஆக்கங்கள் முதல் 152 பக்கங்களிலும், ‘பலதுறை” என்ற இரண்டாம் பிரிவில் பன்னிரு ஆக்கங்கள் அடுத்த 76 பக்கங்களிலம், ‘கவிதாஞ்சலிகள்’ என்ற மூன்றாம் பிரிவில் நான்கு ஆக்கங்கள் 12 பக்கங்களிலும், இறுதிப் பிரிவான ’நாவலர் களஞ்சியம்’ என்ற நான்காவது பிரிவில் ஆறு ஆக்கங்கள் இறுதி 70 பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளன. பக்கங்கள் தனித்தனியாக இலக்கமிடப்பட்டுள்ளன. இம்மலரில், ஆசியுரைகள், வாழ்த்துரைகள், கவிதாஞ்சலிகள் அகியவற்றுடன் அறிஞர் பலரின் அரிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நாவலரும் புராண படனமும் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), ஞானஞாயிறு நாவலர் பெருமான் (ச.தண்டபாணி தேசிகர்), நாவலர் பெருமை (இ.நமசிவாய தேசிகர்), தற்கால உரைநடையின் தந்தை (வி.செல்வநாயகம்), நாவலர் வகுத்த புதுப்பாதை (க.கைலாசபதி), தமிழ் இலக்கியத்துக்கு நாவலர் புரிந்தபணி (பொ.பூலோகசிங்கம்), நாவலர் புகழை நானோ சொல்லவல்லேன் (க.சரவணமுத்துப்பிள்ளை), நாவலரும் தமிழ்மொழியும் (சொ.சிங்காரவேலன்), ஆறுமுக நாவல சற்குரு (ம.க.வேற்பிள்ளைப் புலவர்), நாவலரும் நற்றமிழும் (சி.நயினார் முகமது), அச்சகமும் பதிப்பீடும் (நாரா நாச்சியப்பன்), தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி (எஸ்.சோமசுந்தர பாரதி), நாவலர் கல்விப் பணி (ச.அம்பிகைபாகன்), நாம் நாவலருக்குச் செய்யும் கைம்மாறுகள் (சுத்தானந்த பாரதியார்), கல்வித் துறையில் தீர்க்க தரீசனம் (கி.லக்ஷ்மணன்), நாவலர் சைவக் காவலர் (மகரிஷி சுத்தானந்த பாரதியார்), உசாத் துணை (அ.வி.மயில்வாகனம்), நாவலரும் பதிப்பாசிரியப் பண்பும் (கண்ணப்ப முதலியார்), தமிழ் உரைநடையின் தந்தை (சோமலெ), பத்திரிகையில் நாவலரின் எழுத்து நடை (க.சதாமகேசன்), ஏற்ற வழிகாட்டி (தி.செல்வக்கேசவராய முதலியார்), நாவலரது இலக்கணப் பணி (செ.வேலாயுதபிள்ளை), மறைவளர்த்த நாவலரும் முஸ்லிம் நேசன் ஆசிரியரும் (எஸ்.எம்.கமாலுத்தீன்), நாவலர் காலம் (ச.தனஞ்சயராசசிங்கம்), ஆறுமுக நாவலரின் ஆளுமை (செவ்வேள்), ஒப்புயர்வில்லா நாவலன் (கு.அம்பலவாணபிள்ளை), தமிழிலே குறியீட்டிலக்கணம் புகுத்தியவர் (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்), தமிழ் செய்த தவம் (வி.சீ.கந்தையா), கந்த புராணங் காக்கும் கலாசாரம் (த.வேதநாயகி), நாவலர் எழுப்பும் முதல் வினா (செ.தனபாலசிங்கன்), நாங்களும் மெச்சுகின்றோம் (நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்), நாவலருக்கு என்ன தெரியும்? (குல.சபாநாதன்), நாவலர் பெருமான் (சம்பந்தன்), நாவலர் வழிவந்த சமுதாயம் (பொன். முத்துக்குமாரன்), நாவலரும் முஸ்லிம்களும் (மு.முகம்மது உவைஸ்), தமிழிலக்கண அறிவு பரவுவதற்கு உதவியவர் நாவலர் பெருமானே (மறைமலை அடிகள்), தமிழகத்தை ஈழ நாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர் (சு.வித்தியானந்தன்), நாவலரும் மதிப்பும் பணியும் (தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை), அச்சாளர் ஆறுமுக நாவலர் (நா.இரத்தினசபாபதி), Arumuga Navalar (H.W.Tambiah), Pioneering HERO (A.M.A.Azeez), Prince of Tamil Scholars (C.S.Navaratnam), திருநின்ற செம்மையே செம்மை (புலவர் பாண்டியனார்), தமிழர் தவப்பயன் (மு.நல்லதம்பி), சிவநெறி (திருமுருக கிருபானந்த வாரியார்), அகப்பொருளில் அருட்பொருள் (முருகவேள்), நாவலர் காலத்து புலவர்கள் (க.கி.நடராஜன்), வசன நடை கைவந்த வல்லாளர் (எம்.ஆர்.அடைக்கலசாமி), நாவலருக்குப் பின் ஈழத்து உரையாசிரியர்கள் (கு.பூரணானந்தா), மனிதாபிமான மாண்பாளர்கள் (சாலை இளந்திரையன்), மாதோட்டம் (மகேஸ்வரி மகாதேவா), ஈழமும் சிதம்பரமும் (அருள்.தியாகராசா), முந்தியும் இருந்த சிந்துகள் (முருகையன்), ஈழத்தில் தமிழ் நாடகங்கள் (கலையரசு.க.சொர்ணலிங்கம்), தமிழில் விஞ்ஞானமும் இலங்கை நாட்டின் பணியும் (பெ.நா.அப்புஸ்வாமி), Bharata Natyam and Ceylon (S.Sivanayagam),  நல்லூர் ஆறுமுக நாவலனார் (கவிதை) (விபுலானந்த அடிகள்), நாவலன் சீரடிகள் வாழி(கவிதை)  (நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர்), நாவலர் தாள் இறைஞ்சுதும் (கவிதை)  (கா.பொ.இரத்தினம்), கனிதமிழ் ஈழத்தோங்கக் கலங்கரை விளக்கம் ஆனோன் (கவிதை) (தான்தோன்றிக் கவிராயர்), நாவலர் வாழ்க்கைத் திகதிகள், ஆறுமுக நாவலரின் வரலாற்றுடன் தொடர்புடையோர், நாவலர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள், நாவலர் காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சம்பவங்கள் சில, ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -1: கூழங்கைத்தம்பிரான் (? – 1795), ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -2: நல்லூர் மனப்புலி முதலியார் மகன் சரவணமுத்துப் புலவர் (1802 – 1845), ஆசிரியர் மாணாக்கர் பரம்பரை -3: நல்லூர் க.ஆறுமுக நாவலர் (1822 – 1879), நாவலர் நூல்கள், நாவலரைப் பற்றிய நூல்கள் ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

மேலும் பார்க்க: விபுலானந்தம்: விபுலானந்த அடிகளாரது எழுத்தாக்கப் பணிகள்-கைந்நூல்.15019

ஏனைய பதிவுகள்

Free online Online casino games

Content Simple tips to Win in the Totally free Position Video game in the a gambling establishment? Methods for To play Luck- compared to. Strategy-Founded

12406 – சிந்தனை (தொகுதி V, இதழ் 3).

ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, கார்த்திகை 1993. (யாழ்ப்பாணம்: யு டீ அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). (7), 105 பக்கம், விளக்கப்படங்கள்,

Freispiele inside Registrierung exklusive Einzahlung 2024

Content inoffizieller mitarbeiter Kasino einzahlen – nachfolgende Traktandum Casinos & Zahlungsmethoden Entsprechend können Sie kostenlose Freispiele beibehalten? Auszahlungsmodalitäten Traktandum Slots, nachfolgende Diese über täglichen Freispielen