சு.செல்லத்துரை. யாழ்ப்பாணம்: அண்ணா தொழிலகம், இணுவில், 1வது பதிப்பு, சித்திரை 2015. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51144-6-2.
யாழ்ப்பாண மாவட்டத்தின் இணுவிலில் இயங்கிவரும் அண்ணா தொழிலகம் பற்றிய வரலாற்று நூல். வாழ்த்தும் வரவேற்பும், எண்ணிலா இன்னல்கள், இருப்பைக் குலைத்த இடப்பெயர்வுகள், எழுச்சி பெற்ற இன்றைய தொழிலகம், அறிஞர்கள் பார்வையில் அண்ணா ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்நூல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்தும் வரவேற்பும் என்ற பிரிவில் நுழைவாயில், பதிப்புரை, முன்னுரை (சபா ஜெயராசா), அணிந்துரை (கோகிலா மகேந்திரன்) ஆகியவற்றுடன் சைவப்புலவர் சு. செல்லத்துரை, ஆறு திருமுருகன், சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரின் வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றுள்ளன. எண்ணிலா இன்னல்கள், இருப்பைக் குலைத்த இடப்பெயர்வுகள், எழுச்சி பெற்ற இன்றைய தொழிலகம் ஆகிய பிரிவுகள் அண்ணா தொழிலகத்தின் வரலாறு விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அறிஞர்கள் பார்வையில் அண்ணா என்ற இறுதிப் பிரிவில் பேராசிரியர் க.தேவராஜா, காந்தளகம் க.சச்சிதானந்தன், ச.வே.பஞ்சாட்சரம், பேராசிரியை வசந்தி அரசரத்தினம், நீலலோஜனி ஜெகதீஸ்வரன், கவிஞர் சொ.பத்மநாதன், வைத்திய கலாநிதி என்.சிவராஜா, மருத்துவர் நச்சினார்க்கினியன், பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, கந்தையா ஸ்ரீகணேசன், ம.வ.கானமயில்நாதன், வல்லிபுரம் மகேஸ்வரன், வளர்மதி சுமாதரன், செங்கதிரோன் ந.கோபாலகிருஷ்ணன், இ.தவகோபால், கோத்திரன், எஸ்.பி.நடராசா ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.