15924 சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு நினைவு மலர், 1875-1975.

அருட்திரு சா.ம.செல்வரட்ணம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழாக்குழு, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

(20), 134 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

சுவாமி ஞானப்பிரகாசரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பெற்றுள்ள இச்சிறப்பு மலரில் முன்னுரை: எமது இலட்சியம் (சா.ம.செல்வரட்ணம்), அருளுரை: யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருள் திரு வ.தியோகுப்பிள்ளை ஆசியுரை: அனைத்துலகத் தமிழாராய்ச்சிச் தந்தை தவத்திரு சே.தனிநாயகம், வாழ்த்துரை (கா.பொ.இரத்தினம்), மனக்கமலம் மலர வாராய் (நெடுநகர் ஞானி), குருவே நான் வணங்குகின்றேன் (பண்டிதஞானி), Missionary and Scholar (Edmund Pieris), பண்பாடு மாந்தப் பருவத்தின் தெய்வக்குணம் (க.ப.அறவாணன்), The Velaikkara Inscription at Padaviya (S.Pathmanathan),முற்றிப் பழுத்த மொழி நிபுணர் (மாஸ்கரேனஸ்), பூனை புலம்பல் (அமுது), My Saintly Guru (H.S.David), The Tamil Diglossia Situation in Sri Lanka (S.Thananjayarajasingham), Swamy Gnanaprakasar’s Historical Research (Bertram Bastiampillai), The Missionary ‘Ad Paganos’ (F.J.Stanislaus), சுவாமி கண்ட தெய்வக் கொள்கைகள் (அன்ரனி ஜோன் அழகாசன்), மணக்கோலத்தில் சுவாமிகள் – என் அனுபவம் (ரி.ஏ.ஜே.மதுரநாயகம்), ‘தமிழச்சியின் கத்தி’ நான் சுவைத்த காப்பியம் (கரவையூர்ச் செல்வம்), ஈழத்தின் ஆதிக்குடிகள் திராவிடர்களே (எஸ்.ஏ.ஐ.மத்தியூ), சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ்த் தொண்டு (ஜூலியற் புஷ்பம் மரியாம்பிள்ளை), சுவாமி ஞானப்பிரகாசரின் சமயத் தொண்டு (புஷ்பலதா வாசுதேவன்), மறைமலையடிகளின் மடல் (யு.று.அரியநாயகம்), இது தான் உயர்குலமா? (கவிதை) A.நவரத்தினம், சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய நூல்கள், விழாக்களும் குழுக்களும்: நாடெங்கும் நடந்த ஞானப்பிரகாசர் விழாக்கள், துன்பம் தந்த விசுவாச உறுதி, நன்றி மறப்பது நன்றன்று அது எமது தமிழ்ப் பண்புமன்று (ச.மா.செல்வரட்ணம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10260).

ஏனைய பதிவுகள்

14736 அவள் (நாவல்).

இ.விஜயேந்திரன் (இயற்பெயர்: இ.இராஜேஸ்வரன்). மல்லாகம்: விஜயா பிரசுரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). 54 பக்கம், விலை: ரூபா: 1.25, அளவு: 18×12 சமீ. ஆசிரியரின் முதலாவது நாவல்.

9372 தமிழ் மொழி கற்பித்தல்: மொழியியலாளர் நோக்கு.

இரத்தினமலர் கயிலைநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இரத்தினமலர் கயிலைநாதன், 1வது பதிப்பு, மார்கழி 1999. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்). xi, 196 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ. இலங்கைப்